(வால்மீகி ஒரு மகாகாவியத்தை
இயற்றி அதற்கு ராமாயணம் என்று பெயரிடுகிறார்.
முன்னர் நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் மனக்கண் முன் தெளிவாகக் காண்கிறார்.)
श्रुत्वा वस्तु समग्रं तद्धर्मात्मा धर्मसंहितम् ।
व्यक्तमन्वेषते भूयो यद्वृत्तं तस्य धीमत: ।।1.3.1।।
சிறந்த புத்திமானான நாரதரிடமிருந்து, அறிவார்ந்த ராமனுடைய முழுக் கதையயும்
கேட்டிருந்தாலும், இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக வால்மீகி மகரிஷி மேலும் தேடினார்.
उपस्पृश्योदकं सम्यग्मुनिस्स्थित्वा कृताञ्जलि: ।
प्राचीनाग्रेषु दर्भेषु धर्मेणान्वेषते गतिम् ।।1.3.2।।
தர்ப்பைப் புல்
ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, முறைப்படி ஆசமனம் செய்து, கைகளைக் கூப்பிக் கொண்டு,
தன் தவ வலிமையால், ராமனைப் பற்றித் தெரியாத சில செய்திகளைத் தெரிந்து கொள்ள
முனைந்தார்.
रामलक्ष्मणसीताभी
राज्ञा दशरथेन च ।
सभार्येण सराष्ट्रेण यत्प्राप्तं तत्र तत्त्वत: ।।1.3.3।।
हसितं भाषितं चैव गतिर्या यच्च चेष्टितम् ।
तत्सर्वं धर्मवीर्येण यथावत्सम्प्रपश्यति ।।1.3.4।।
தனது தவ வலிமையால்,
மகரிஷியானவர், ராமன்,சீதை, லக்ஷ்மணன், தசரத மன்னர், அவருடைய மனைவியர், அவருடைய
ராஜ்ஜியம், அவர்கள் பார்த்தவை, அனுபவித்தவை, செய்ய முயன்றவை, அவர்களுடைய உரையாடல்,
அவர்களுடைய சிரிப்பு ஆகிய அனைத்தையும் நேரில் பார்ப்பது போலத் தன் மனக்கண்ணால்
பார்த்தார்.
स्त्रीतृतीयेन च तदा
यत्प्राप्तं चरता वने ।
सत्यसन्धेन रामेण तत्सर्वं चान्ववेक्षितम् ।।1.3.5।।
சத்யசந்தனான ராமன்,
லக்ஷ்மணனுடனும் சீதையுடனும், தண்டகாரண்யக் காட்டில் அலைந்து திரிந்த போது
நடந்தவற்றையெல்லாம் பார்த்தார்.
तत: पश्यति धर्मात्मा तत्सर्वं योगमास्थित: ।
पुरा यत्तत्र निर्वृत्तं पाणावामलकं यथा ।।1.3.6।।
தர்மாத்வான வால்மீகி, தன் யோக சக்தியால், தியானத்தின்
மூலம், ராமனின் வாழ்வில் முன்னர் நடந்த அனைத்தையும், உள்ளங்கை நெல்லிக்கனி போலக்
கண்டார்.
तत्सर्वं तत्त्वतो
दृष्ट्वा धर्मेण स महाद्युति: ।
अभिरामस्य रामस्य चरितं कर्तुमुद्यत: ।।1.3.7।।
कामार्थगुणसंयुक्तं धर्मार्थगुणविस्तरम् ।
समुद्रमिव रत्नाढ्यं सर्वश्रुतिमनोहरम् ।।1.3.8।।
ஒளி மிகுந்த வால்மீகி
மகரிஷி, தன் தவ வலிமையால், ராமனின் கதையை முழுக்க அறிந்து கொண்டு, இவ்வுலக மக்கள்,
செல்வம் மற்றும் சுகங்களை அடைவதற்காகவும், தர்மத்தையே தன் வாழ்க்கையின்
குறிக்கோளாகக் கொண்டு வாழ்வதற்காகவும், தன்னகத்தே எண்ணற்ற ரத்தினங்களைக்
கொண்டிருக்கும் கடல் போல, அனைவரின் செவிக்கும் விருந்தாகும் படியான ராமனின் கதையை
எழுதத் தயாரானார்.
स यथा कथितं पूर्वं
नारदेन महर्षिणा ।
रघुवंशस्य चरितं चकार भगवानृषिः ।।1.3.9।।
புகழ்பெற்ற நாரத மகரிஷி
முதலில் அவருக்கு எவ்வாறு ராமனின் கதையைக் கூறினாரோ, அவ்வாறே வால்மீகி
இயற்றலானார்.
जन्म रामस्य
सुमहद्वीर्यं सर्वानुकूलताम् ।
लोकस्य प्रियतां क्षान्तिं सौम्यतां सत्यशीलताम् ।।1.3.10।।
அந்தக் காவியத்தில்,
ராமனின் பிறப்பு, அவனுடைய மகத்தான வீரம், அனைவருக்கும் நன்மை செய்யும் குணம்,
அனைவரும் விரும்பும் நடத்தை, அழகு, உண்மையில் உறுதி ஆகிய குணங்களை விவரித்தார்.
नानाचित्रकथाश्चान्या
विश्वामित्रसमागमे ।
जानक्याश्च विवाहं च धनुषश्च विभेदनम् ।।1.3.11।।
விஸ்வாமித்திரருடன்
ராமனுடைய தொடர்பு, சிவனுடைய பெரிய வில்லை ஒடித்தது, சீதையை மணந்தது போன்ற அற்புதமான
நிகழ்ச்சிகளை அதில் சேர்த்தார்.
रामरामविवादं च
गुणान्दाशरथेस्तथा ।
तथाऽभिषेकं रामस्य कैकेय्या दुष्टभावताम् ।।1.3.12।।
ராமனுக்கும்
பரசுராமனுக்கும் நடந்த விவாதங்கள், ராமனுடைய அற்புதமான குண நலன்கள், ராமனுக்குப்
பட்டாபிஷேகம் செய்யும் தீர்மானம், கைகேயியின் கெட்ட குணம்,
विघातं चाभिषेकस्य
राघवस्य विवासनम् ।
राज्ञश्शोकविलापं च परलोकस्य चाश्रयम् ।।1.3.13।।
பட்டாபிஷேகத்துக்கு
ஏற்பட்ட தடைகள், ராமனைக் காட்டுக்கு அனுப்புதல், தசரத மன்னனின் துயரம், அவர்
பரலோகம் அடைதல்,
प्रकृतीनां विषादं च
प्रकृतीनां विसर्जनम् ।
निषादाधिपसंवादं सूतोपावर्तनं तथा ।।1.3.14।।
அயோத்தி மக்களின்
துயரம், தன்னைத் தொடர்ந்த அந்த மக்களைத் திருப்பி அனுப்புதல், நிஷாத ராஜனான
குகனுடன் நட்பு, தேரோட்டியான சுமந்திரரைத் திருப்பி அயோத்திக்கு அனுப்புதல்,
गङ्गायाश्चापि सन्तारं भरद्वाजस्य दर्शनम् ।
भरद्वाजाभ्यनुज्ञानाच्चित्रकूटस्य दर्शनम् ।।1.3.15।।
கங்கையைக் கடத்தல்,
பரத்வாஜ முனிவரைச் சந்தித்தல், அவருடைய கட்டளைப்படி சித்ரகூட மலைக்குச் செல்லுதல்,
वास्तुकर्म निवेशं च भरतागमनं तथा ।
प्रसादनं च रामस्य पितुश्च सलिलक्रियाम् ।।1.3.16।।
அங்கே ஒரு குடிசையை
அமைத்து, அதில் வசித்தல், பரதன் வருகை, ராமனை ஆட்சிப்பொறுப்பு ஏற்குமாறு
வேண்டுதல், தந்தையான தசரதருக்கு ஈமச்சடங்குகள் செய்தல்,
पादुकाग्र्याभिषेकं च नन्दिग्रामनिवासनम् ।
दण्डकारण्यगमनं विराधस्य वधं तथा ।।1.3.17।।
பரதன் ராமனின்
பாதுகைகளுக்குப் பட்டாபிஷேகம் செய்தல், நந்திக்கிராமத்தில் வசித்தல், ராமன்
தண்டகாரண்யத்துக்குச் செல்லுதல், அங்கே விராதனை வதைத்தல்,
दर्शनं शरभङ्गस्य
सुतीक्ष्णेन समागमम् ।
अनसूयासहास्यामप्यङ्गरागस्य चार्पणम् ।।1.3.18।।
சரபங்கர், சுதீக்ஷ்ணர்
போன்ற முனிவர்களைச் சந்தித்தல், சீதை அனசூயாவுடன் அன்போடு இருத்தல், சீதையின்
உடம்பில் அவர் வாசனைத் திரவியங்களைத் தடவுதல்,
अगस्त्यदर्शनं चैव
जटायोरभिसङ्गमम् ।
पञ्चवट्याश्च गमनं शूर्पणख्याश्च दर्शनम् ।।1.3.19।।
அகஸ்திய முனிவரைச்
சந்தித்தல், ஜடாயுவைச் சந்தித்தல், பின்னர் பஞ்சவடிக்குச் செல்லுதல், சூர்ப்பனகையின்
வருகை,
शूर्पणख्याश्च संवादं विरूपकरणं तथा ।
वधं खरत्रिशिरसोरुत्थानं रावणस्य च ।।1.3.20।।
சூர்ப்பனகையுடன்
விவாதம், அவளுக்கு அங்கபங்கம் செய்வித்தல், கரன், த்ரிசிரஸ் ஆகியோரை வதைத்தல்,
இதைக் கேள்விப்பட்ட ராவணன் ராமனைப் பழி வாங்க எடுக்கும் முயற்சிகள்,
मारीचस्य वधं चैव वैदेह्या हरणं तथा ।
राघवस्य विलापं च गृध्रराजनिबर्हणम् ।।1.3.21।।
மாரீசனை வதம் செய்தல்,
வைதேகி ராவணனால் கவர்ந்து செல்லப்படுதல், ராமன் சோகத்தில் புலம்புதல், ஜடாயு
கொல்லப்படுதல்,
कबन्धदर्शनं चापि
पम्पायाश्चापि दर्शनम् ।
शबर्या: दर्शनं चैव हनूमद्दर्शनं तथा ।।1.3.22।।
(ராமன்)கபந்தனைப்பார்த்தல்,
பம்பை நதியைக் காணுதல், சபரிக்கு மோக்ஷம் கொடுத்தல் , ஹனுமானைச் சந்தித்தல்,
ऋश्यमूकस्य गमनं
सुग्रीवेण समागमम् ।
प्रत्ययोत्पादनं सख्यं वालिसुग्रीवविग्रहम् ।।1.3.23।।
(ராமன்)ருஷ்யமூக
மலைக்குச் சென்று சுக்கிரீவனைச் சந்தித்தல், அவனுக்குத் தன் மேல் நம்பிக்கை
ஏற்படும் படி செய்தல், வாலி சுக்கிரீவரிடையே போர்,
वालिप्रमथनं चैव सुग्रीवप्रतिपादनम्
।
ताराविलापं समयं वर्षरात्रनिवासनम् ।।1.3.24।।
(ராமன்) வாலியை வதம்
செய்தல், சுக்கிரீவனுக்குப் பட்டம் கட்டுதல், தாரையின் துயரம், சுக்கிரீவனுடன்
நட்பு உடன்படிக்கை செய்து கொள்ளுதல், மழைக்காலம் முடிந்ததும் சீதையைத் தேடும்
திட்டம்,
कोपं राघवसिंहस्य
बलानामुपसङ्ग्रहम् ।
दिश: प्रस्थापनं चैव पृथिव्याश्च निवेदनम् ।।1.3.25।।
சீதையைத் தேடச்
செல்வதில் ஏற்பட்ட தாமதத்தால் ரகு குலத்தின் சிங்கம் போன்ற ராமனுக்கு உண்டான்
கோபம், வானரப்படை திரட்டிப் பல திசைகளிலும் சீதையைத் தேடிச் செல்லவும், திரும்பி
வந்து செய்தி சொல்லவும் சுக்கிரீவன் ஆணையிடுதல்,
अङ्गुलीयकदानं च
ऋक्षस्य बिलदर्शनम् ।
प्रायोपवेशनं चापि सम्पातेश्चापि दर्शनम् ।।1.3.26।।
ராமன்
அடையாளத்துக்காகத் தன் மோதிரத்தை ஹனுமானுக்கு அளித்தல், ரிக்ஷ பர்வதத்தின் குகையைக்
காணுதல், இறக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தீர்மானித்தல், கழுகரசனாகிய
சம்பாதியைச் சந்தித்தல்,
पर्वतारोहणं चापि
सागरस्यापि लङ्घनम् ।
समुद्रवचनाच्चैव मैनाकस्य च दर्शनम् ।।1.3.27।।
ஹனுமான், மகேந்திர மலை
மேல் ஏறி சமுத்திரத்தைத் தாண்டுதல், சமுத்திரத்தின் சொற்படி மைனாக மலையைப்
பார்த்தல்,
सिंहिकायाश्च निधनं
लङ्कामलयदर्शनम् ।
रात्रौ लङ्काप्रवेशं च एकस्याथ विचिन्तनम् ।।1.3.28।।
சிம்ஹிகையின் வதம்,
ஒரு மலை மேல் ஏறி லங்கை முழுவதையும் பார்த்தல், இரவு நேரத்தில் லங்கைக்குள்
நுழைதல், பிறகு ஹனுமான் தனியாகச்
சிந்தனையில் ஆழ்தல்,
दर्शनं रावणस्यापि
पुष्पकस्य च दर्शनम् ।
आपानभूमिगमनमवरोधस्य दर्शनम्।।1.3.29।।
ராவணனைப் பார்த்தல், புஷ்பக விமானத்தையும்
பார்த்தல், குடிவகைகள் ( பானங்கள் ) வைத்திருந்த அறைக்குச் செல்லுதல், பெண்கள்
இருக்கும் அந்தப்புரத்தைப் பார்த்தல்,
अशोकवनिकायानं
सीतायाश्चपि दर्शनम् ।
अभिज्ञानप्रदानं च रावणस्य च दर्शनम् ।।1.3.30।।
அசோக வனத்துள் புகுந்து
சீதையைத் தரிசித்தல், அடையாளமாகக் கொண்டு வந்த மோதிரத்தை அவளுக்கு அளித்தல்,
ராவணனைப் பார்த்தல்,
राक्षसीतर्जनं चैव
त्रिजटास्वप्नदर्शनम् ।
मणिप्रदानं सीताया वृक्षभङ्गं तथैव च ।।1.3.31।।
ராக்ஷஸிகள் சீதையை
மிரட்டுதல், த்ரிஜடை தன் கனவைப்பற்றிக் கூறுதல், சீதை ஹனுமானிடம் சூடாமணியைக்
கொடுத்தல், பின்னர் ஹனுமான் அசோகவனத்து மரங்களை அழித்தல்,
राक्षसीविद्रवं चैव
किङ्कराणां निबर्हणम् ।
ग्रहणं वायुसूनोश्च लङ्कादाहाभिगर्जनम् ।।1.3.32।।
அரக்கிகள்
அங்கிருந்து ஓடுதல், ராவணனின் ஆட்கள் ஹனுமானால் கொல்லப் படுதல், வாயு புத்திரனான
ஹனுமான் ராவணனுடைய ஆட்களிடம் பிடிபடல், பின்னர் பயங்கரமான கர்ஜனையுடன் ஹனுமான்
லங்கையை எரித்தல்,
प्रतिप्लवनमेवाथ मधूनां हरणं तथा ।
राघवाश्वासनं चापि मणिनिर्यातनं तथा ।।1.3.33।।
மீண்டும்
சமுத்திரத்தைத் தாண்டி வந்து மதுவனத்தை சேதப்படுத்தி, ராமனைக்கண்டு, அவனுக்கு
ஆறுதல் வழங்கி, சீதை கொடுத்த சூடாமணியையும் அவனிடம் கொடுத்தல்,
सङ्गमं च समुद्रेण
नलसेतोश्च बन्धनम् ।
प्रतारं च समुद्रस्य रात्रौ लङ्कावरोधनम् ।।1.3.34।।
ராமன் சமுத்திர
ராஜனைச் சந்தித்தல், நலனின் உதவியால் பாலம் கட்டுதல், அதன் மூலம் சமுத்திரத்தைக்
கடத்தல், இரவில் லங்கையுள் நுழைதல்,
विभीषणेन संसर्गं
वधोपायनिवेदनम् ।
कुम्भकर्णस्य निधनं मेघनादनिबर्हणम् ।।1.3.35।।
விபீஷணனின்
சேர்க்கையால், ராவணனைக்கொல்லும் உபாயம் அறிதல், கும்பகர்ணனின் மரணம், மேக நாதனின்
வதம்,
रावणस्य विनाशं च
सीतावाप्तिमरे: पुरे ।
विभीषणाभिषेकं च पुष्पकस्य च दर्शनम् ।।1.3.36।।
ராவணனை அழித்துச்
சீதையைத் திரும்பப் பெறுதல், எதிரிகளின் ராஜ்ஜியத்தில் விபீஷணனுக்குப் பட்டம்
கட்டுதல், புஷ்பக விமானத்தைப் பார்த்தல்,
अयोध्यायाश्च गमनं भरतेन समागमम् ।
रामाभिषेकाभ्युदयं सर्वसैन्यविसर्जनम्।
स्वराष्ट्ररञ्जनं चैव वैदेह्याश्च विसर्जनम्।।1.3.37।।
அதன் மூலம், அயோத்தி
அடைந்து, பரதனைச் சந்தித்து, ராம பட்டாபிஷேகம் முடிந்த பின்னர், வானர சைன்யத்தைத்
திருப்பி அனுப்புதல், ராமன் தன் நாட்டு மக்களை மகிழ்ச்சியாக வைத்திருத்தல்,
சீதையைக் காட்டுக்கு அனுப்புதல்,
अनागतं च यत्किञ्चिद्रामस्य वसुधातले ।
तच्चकारोत्तरे काव्ये वाल्मीकिर्भगवानृषि: ।।1.3.38।।
ஆகியவற்றைப் பற்றித்
தன் காவியத்தில் எழுதிய வால்மீகி மகரிஷி, பின்னர் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளை
உத்தர காண்டத்தில் சேர்த்துக்கொண்டார்.
इत्यार्षे
श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे तृतीयस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின்
ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் மூன்றாவது ஸர்க்கம், நிறைவு
பெறுகிறது.
***
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment