ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 12
(தசரதர் ரிஷ்யஸ்ருங்கரிடம்
யாகத்தை நடத்திக் கொடுக்குமாறு வேண்டுகிறார். அவர் அந்த வேண்டுகோளை ஏற்று, யாகத்துக்கு
வேண்டிய பொருள்களைச் சேகரிக்கவும், யாகக் குதிரையை அனுப்பவும் ஏற்பாடு செய்யச் சொல்கிறார்.
மன்னர் தன் அமச்சர்களிடத்தில், தேவையான ஏற்பாடுகளைக் கவனிக்கச் சொல்லி ஆணையிடுகிறார்.)
तत: काले बहुतिथे
कस्मिंश्चित्सुमनोहरे।
वसन्ते समनुप्राप्ते राज्ञो यष्टुं मनोऽभवत्।।1.12.1।।
பிறகு, வெகு காலம்
கழித்து, மனோகரமான வசந்த காலம் துவங்கிய போது, தசரத மன்னருக்கு, யாகம் செய்ய
வேண்டும் என்ற விருப்பம் உண்டாயிற்று.
तत: प्रसाद्य शिरसा तं विप्रं देववर्णिनम्।
यज्ञाय वरयामास सन्तानार्थं कुलस्य वै।।1.12.2।।
அதன் படி, ஒரு தேவனைப்
போல் ஒளி வீசிக்கொண்டிருந்த அந்த அந்தணரிடம் (ருஷ்யஸ்ருங்கர்) சென்று, அவரை
வணங்கித் தன் குலத்தைச் செழிக்க வைக்கும் புத்திரபாக்கியத்திற்கான யாகம்
செய்விப்பதற்கு, அவரை அதிகார பூர்வ
புரோகிதராக நியமித்தார்.
तथेति च स राजानमुवाच च सुसत्कृत:।
सम्भारा सम्भ्रियन्तां ते तुरगश्च विमुच्यताम्।।1.12.3।।
ருஷ்யஸ்ருங்கர்,
‘அப்படியே ஆகட்டும்’ என்று சொல்லி, “ யாகத்துக்கு வேண்டிய பொருட்களைச் சேகரியுங்கள்.
அதற்கான உங்கள் குதிரையை அனுப்புங்கள்’ என்று கூறினார்.
ततो राजाऽब्रवीद्वाक्यं
सुमन्त्रं मन्त्रिसत्तमम्।
सुमन्त्रावाहय क्षिप्रं ऋत्विजो ब्रह्मवादिन:।।1.12.4।।
सुयज्ञं वामदेवं च जाबालिमथ काश्यपम्।
पुरोहितं वसिष्ठं च ये चान्ये द्विजसत्तमा:।।1.12.5।।
பின்னர் தசரத மன்னர்,
அமைச்சர்களுள் சிறந்தவரான சுமந்திரரிடம், “ சுமந்திரரே! வேதங்களில் தேர்ந்த
சுயக்ஞ்யர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், ராஜ புரோகிதரான வசிஷ்டர் ஆகியோரையும்,
இன்னும் பல சிறந்த அந்தணர்களையும் உடனடியாக இங்கு வரவழையுங்கள்.”
ततस्सुमन्त्रस्त्वरितं गत्वा त्वरितविक्रम:।
समानयत्स तान्विप्रान् समस्तान्वेदपारगान्।।1.12.6।।
உடனே, சுமந்திரர்
வேகமாகச் சென்று, வேதங்களில் தேர்ந்த அந்த அந்தணர்களை அழைத்து வந்தார்.
तान्पूजयित्वा
धर्मात्मा राजा दशरथस्तदा।
धर्मार्थसहितं युक्तं श्लक्ष्णं वचनमब्रवीत्।।1.12.7।।
அவர்களைப் பூஜித்த
தர்மாத்வான தசரதர், அறமுடையதும், பொருள் பொதிந்ததுமாகிய, இனிய வார்த்தைகளைக்
கூறினார்.
मम लालप्यमानस्य पुत्रार्थं नास्ति वै सुखम्।
तदर्थं हयमेधेन यक्ष्यामीति मतिर्मम।।1.12.8।।
“புத்திரர்கள்
இல்லாததால், மிகவும் வருந்தும் எனக்கு மகிழ்ச்சி என்பது இல்லை. அதற்காக வேண்டி
அஸ்வமேத யாகம் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன்.”
तदहं यष्टुमिच्छामि शास्त्रदृष्टेन कर्मणा।
ऋषिपुत्रप्रभावेन कामान्प्राप्स्यामि चाप्यहम्।।1.12.9।।
சாஸ்திரத்தில்
குறிப்பிட்டுள்ள படி அனைத்து ஆன்மீகச் சடங்குகளையும் செய்து, இந்த வேள்வியைப்
பூர்த்தி செய்து, ரிஷி புத்திரரான ருஷ்யஸ்ருங்கரின் அருளால், என் விருப்பத்தை
நிறைவேற்றிக்கொள்வேன்.”
ततस्साध्विति तद्वाक्यं ब्राह्मणा: प्रत्यपूजयन्।
वसिष्ठप्रमुखास्सर्वे पार्थिवस्य मुखाच्च्युतम्।।1.12.10।।
அரசரின் வாயில் இருந்து
வந்த இந்த வார்த்தைகளைக் கேட்டு, வசிஷ்டர் முதலாய அந்தணர்கள், “ நன்று! நன்று!”
எனப் பாராட்டினார்கள்.
ऋष्यशृङ्गपुरोगाश्च
प्रत्यूचुर्नृपतिं तदा।
सम्भारास्सम्भ्रियन्तां ते तुरगश्च विमुच्यताम्।।1.12.11।।
ருஷ்யஸ்ருங்கரின் தலைமையில் இருந்த அந்தப் புரோகிதர்கள், “ யாகத்துக்கு வேண்டிய
பொருள்கள் சேகரிக்கப்படட்டும். குதிரையும் அனுப்பப் படட்டும்”
सर्वथा प्राप्स्यसे
पुत्रांश्चत्वारोऽमितविक्रमान्।
यस्य ते धार्मिकी बुद्धिरियं पुत्रार्थमागता ।।1.12.12।।
‘புத்திரர்களை அடைய
வேண்டும் என்ற இந்த மேலான எண்ணம் உங்களுக்கு வந்திருப்பதால், வீரமும் சக்தியும்
நிறைந்த நான் கு புதல்வர்களைப் பெறுவீர்கள்” என்று கூறினார்கள்.
तत: प्रीतोऽभवद्राजा
श्रुत्वा तद्विजभाषितम्।
अमात्यांश्चाब्रवीद्राजा हर्षेणेदं शुभाक्षरम्।।1.12.13।।
அந்த அந்தணர்களின்
வார்த்தைகளைக் கேட்ட அரசர் மிகவும் மகிழ்ந்து, இந்த மங்களகரமான சொற்களைச்
சொன்னார்.
गुरूणां वचनाच्छीघ्रं
सम्भारास्सम्भ्रियन्तु मे।
समर्थाधिष्ठितश्चाश्वस्सोपाध्यायो विमुच्यताम्।।1.12.14।।
“என் குருமார்கள் கூறியபடி,
யாகத்துக்கு வேண்டிய பொருள்களைச் சேகரிப்பேன். தலைமைப் புரோகிதருடன், திறமையான
படைவீரர்களின் பாதுகாப்பில் குதிரையையும் அனுப்புவேன்.
सरय्वाश्चोत्तरे तीरे
यज्ञभूमिर्विधीयताम्।
शान्तयश्चाभिवर्धन्तां यथाकल्पं यथाविधि।।1.12.15।।
ஸரயு நதிக்கு வடக்கே,
ஒரு யாகசாலை அமைக்கப்படட்டும். சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின் படி,
சாந்தி கர்மங்களும், செய்யப்படட்டும்.
शक्य: प्राप्तुमयं
यज्ञस्सर्वेणापि महीक्षिता।
नापराधो भवेत्कष्टो यद्यस्मिन्क्रतुसत्तमे।।1.12.16।।
எந்த ஒரு அரசரும், இந்த
மிகச்சிறந்த யாகத்தை, எந்த விதமான தடைகளும், தவறுகளும் நேராமல் நடத்தி முடித்தால்,
அவர் விரும்பிய பலனை நிச்சயம் பெறலாம்.
छिद्रं हि मृगयन्तेऽत्र
विद्वांसो ब्रह्मराक्षसा:।
निहतस्य च यज्ञस्य सद्य: कर्ता विनश्यति।।1.12.17।।
கல்வி கற்றிருந்தும், சாபத்தினால் பிரம்ம
ராட்சஸர்களாக மாறியவர்கள், இந்த யாகங்களில் எதாவது குற்றம் குறைகள் அகப்படாதா
என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்படிக் கிடைத்து விட்டால், யாகம்
செய்பவரையே அழித்து விடுவார்கள்.
तद्यथा विधिपूर्वं मे
क्रतुरेष समाप्यते।
तथा विधानं क्रियतां समर्था: करणेष्विह।।1.12.18।।
ஆகவே, அனைத்து ஏற்பாடுகளும்,
சாஸ்திரங்களில் சொல்லப் பட்டுள்ள படி , முறையாகச் செய்யப் படவேண்டும். நீங்கள்
எல்லாம் அப்படிச் செய்வதில் நிபுணர்கள்.”
तथेति च ततस्सर्वे
मन्त्रिण: प्रत्यपूजयन्।
पार्थिवेन्द्रस्य तद्वाक्यं यथाज्ञप्तमकुर्वत।।1.12.19।।
அந்த அமைச்சர்கள், அரசருடைய இந்தச்
சொற்களை மதித்து, “தங்கள் கட்டளைப் படியே” என்று பதிலிறுத்தார்கள்.
ततो द्विजास्ते
धर्मज्ञमस्तुवन्पार्थिवर्षभम्।
अनुज्ञातास्ततस्सर्वे पुनर्जग्मुर्यथागतम्।।1.12.20।।
பின்னர், தர்மங்களை அறிந்தவர்களான
அந்த அந்தணர்கள், தசரத மன்னரை வணங்கி, விடைபெற்றுச் சென்றனர்.
गतेष्वथ द्विजाग्य्रेषु
मन्त्रिणस्तान्नराधिप:।
विसर्जयित्वा स्वं वेश्म प्रविवेश महाद्युति:।।1.12.21।।
அந்தச் சிறந்த அந்தணர்கள் விடை பெற்றுச் சென்ற பின்னர், அமைச்சர்களையும் அனுப்பி
விட்டுத் தசரத மன்னர் தன்
அந்தப் புரத்துக்குள் பிரவேசித்தார்.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे द्वादशस्सर्ग:।।2
இத்துடன், வால்மீகியின்
ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் பன்னிரண்டாவது ஸர்க்கம்,
நிறைவு பெறுகிறது.
***
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment