ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 13
( தசரதர் வசிஷ்டரிடம்,
யாகத்தைத் தொடங்குமாறு வேண்டிக்கொள்கிறார். பல துறைகளிலும் புகழ் பெற்ற நிபுணர்களை
யாகம் சம்பந்தப்பட்ட வேலைகளைப் பார்த்துக் கொள்ளுமாறு பணிக்கிறார். சுமந்திரரிடம்
பல தேசத்து அரசர்களையும் யாகத்துக்கு அழைக்கச் சொல்கிறார். வந்தவர்களை
மரியாதையுடன் வரவேற்கிறார். பின்னர், தன் மனைவிகளுடன் யாகத்தைத் தொடங்குகிறார். )
पुन: प्राप्ते वसन्ते
तु पूर्णस्संवत्सरोऽभवत्।–
प्रसवार्थं गतो यष्टुं हयमेधेन वीर्यवान्।।1.13.1।।
வஸந்த காலம் மீண்டும்
வந்த போது, ஒரு வருடம் ஆகியிருந்தது. வலிமை மிகுந்த தசரத மன்னர், தேவதைகளை
வேண்டிப் புதல்வர்களை அடைவதற்காக, யாக சாலைக்குள் நிழைந்தார்.
अभिवाद्य वसिष्ठं च न्यायत: परिपूज्य च।
अब्रवीत्प्रश्रितं वाक्यं प्रसवार्थं द्विजोत्तमम्।।1.13.2।।
அந்தணர்களுள் சிறந்தவரான
வசிஷ்டரை வணங்கி, அவருக்கு, முறைப்படி பூஜைகள் செய்த தசரதர், புதல்வர்கள் கிடைக்க
வேண்டி, மிகவும் பணிவுடன் கூறினார்:
यज्ञो मे क्रियतां
ब्रह्मन्यथोक्तं मुनिपुङ्गव।
यथा न विघ्न: क्रियते यज्ञाङ्गेषु विधीयताम्।।1.13.3।।
“முனிவர்களுள்
சிறந்தவரே! எந்த விதமான தடைகளும் இன்றி, இந்த யாகம் நிறைவேறும் பொருட்டு,
முறைப்படி செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்யுங்கள்.
भवान्
स्निग्धस्सुहृन्मह्यं गुरुश्च परमो महान्।
ओढव्यो भवता चैव भारो यज्ञस्य चोद्यत:।।1.13.4।।
தாங்கள் தான் என் மேல்
அன்பு கொண்ட நண்பரும், எனது மிக்ச்சிறந்த ஆன்மீக குருவும் ஆவீர்கள். இப்போது
துவங்கியுள்ள் இந்த யாகத்தின் முழுப் பொறுப்பையும் தாங்கள் தான் ஏற்க வேண்டும். “
तथेति च स
राजानमब्रवीद्द्विजसत्तमः।
करिष्ये सर्वमेवैतद्भवता यत्समर्थितम्।।1.13.5।।
அந்தணர்களுள் சிறந்த
வசிஷ்டரும், “தாங்கள் கூறியபடியே எல்லாவற்றையும் செய்கிறேன்” என்று அரசருக்கு
உறுதி அளித்தார்.
ततोऽब्रवीद्विजान्वृद्धान्यज्ञकर्मसु निष्ठितान्।
स्थापत्ये निष्ठितांश्चैव वृद्धान्परमधार्मिकान्।।1.13.6।।
कर्मान्तिकान् शिल्पकरान्वर्धकीन् खनकानपि।
गणकान्शिल्पिनश्चैव तथैव नटनर्तकान्।।1.13.7।।
तथा शुचीन्शास्त्रविद: पुरुषान् सुबहुश्रुतान्।
यज्ञकर्म समीहन्तां भवन्तो राजशासनात्।।1.13.8।।
इष्टका बहु साहस्राश्शीघ्रमानीयतामिति। 0
उपकार्या: क्रियन्तां च राज्ञां बहुगुणान्विता:।।1.13.9।।
அதன் பிறகு, வசிஷ்டர்
யாகம் செய்விப்பதில் அனுபவம் உள்ள மூத்த அந்தணர்களையும், சிற்ப வேலைப்பாட்டில் கை
தேர்ந்த சிற்பிகளையும், சிறந்த தச்சர்களையும், கிணறு வெட்டுபவர்களையும், சிறந்த
முறையில் கணக்கு வைத்துக் கொள்பவர்களையும், கைவினை செய்பவர்களையும், செங்கற்களைச்
செய்பவர்களையும், நடனமாடுபவர்களையும், நடிகர்களையும், சாஸ்திரங்களைக் கற்றுத்
தேர்ந்தவர்களையும், நேர்மையானவர்களையும், பல விஷயங்களைப் பற்றித் தெரிந்து
வைத்திருப்பவர்களையும், வரவழைத்தார். பிறகு,
யாகம் செய்விப்பவர்களிடம், “ அரசருடைய ஆணைப்படி, யாகத்துக்கான சடங்குகளைத் தொடங்குங்கள்”
என்று கூறினார். செங்கல் செய்பவர்கள், கட்டிடம் கட்டுவோர் ஆகியோரிடம் , “ஆயிரக்கணக்கான
செங்கற்களைக் கொண்டு தற்காலிகமாகத் தங்குவதற்கான கட்டிடங்கள் எழுப்புங்கள்.
வந்திருக்கும் விருந்தினருக்கு, அனைத்து வித வசதிகளும் நிறைந்த, தங்குமிடங்களை அமையுங்கள்
“
ब्राह्मणावसथाश्चैव
कर्तव्याश्शतशश्शुभा:।
भक्ष्यान्नपानैर्बहुभिस्समुपेतास्सुनिष्ठिता:।।1.13.10।।
அந்தணர்கள் தங்குவதற்கு, நிறைய உணவுப் பொருட்களும், பானங்களும் நிறைந்த, நூற்றுக்கணக்கான தூய்மையான தங்குமிடங்களை
அமையுங்கள்.
तथा पौरजनस्यापि
कर्तव्या बहुविस्तरा:।
आवासा बहुभक्ष्या वै सर्वकामैरुपस्थिता:।।1.13.11।।
நகர மக்கள்
தங்குவதற்கு, நிறைய உணவுப்பொருட்களுடனும், அவர்களுடைய எல்லா விருப்பங்களும்
நிறைவேறுவதற்கான ஏற்பாடுகளுடனும் கூடிய, விஸ்தாரமான தங்குமிடங்களை அமையுங்கள்.
तथा जानपदस्यापि जनस्य बहुशोभनम्।
दातव्यमन्नं विधिवत्सत्कृत्य न तु लीलया।।1.13.12।।
அதே போல, கிராமத்து
மக்களுக்கும், சிறந்த உணவுகளை, முறைப்படி உபசரித்துக் கொடுங்கள். அலட்சியமாகக்
கொடுக்கக் கூடாது.
सर्वे वर्णा यथा पूजां
प्राप्नुवन्ति सुसत्कृता:।
न चावज्ञा प्रयोक्तव्या कामक्रोधवशादपि।।1.13.13।।
அனைத்து வர்ணத்தினரும்,
மரியாதையுடன் நடத்தப் படவேண்டும். தனிப்பட்ட விருப்பம், கோபம் ஆகியவற்றால்,
யாரையும் அவமானப் படுத்தக்கூடாது.
यज्ञकर्मसु ये व्यग्रा: पुरुषाश्शिल्पिनस्तथा।
तेषामपि विशेषेण पूजा कार्या यथाक्रमम्।।1.13.14।।
ते च स्युस्सम्भृतास्सर्वे वसुभिर्भोजनेन च।
யாக காரியத்தில்
ஈடுபட்டுள்ள சிற்பிகளையும் சிறப்பாக கௌரவித்து அவர்களைப் பணத்தாலும், உணவுகளாலும்
திருப்திப் படுத்த வேண்டும்.
यथा सर्वं सुविहितं न
किञ्चित्परिहीयते।।1.13.15।।
तथा भवन्त: कुर्वन्तु प्रीतिस्निग्धेन चेतसा।
எல்லாவற்றையும்
சரியாகச் செய்ய வேண்டும். ஒரு சிறிய விஷயத்தைக்கூட விட்டு விடக்கூடாது. எல்லா வேலைகளையும்,
மனமார்ந்த அன்புடன் செய்யுங்கள்.”
ततस्सर्वे समागम्य
वसिष्ठमिदमब्रुवन्।।1.13.16।।
यथोक्तं तत्सुविहितं न
किञ्चित्परिहीयते।
यथोक्तं तत्करिष्यामो न किञ्चित्परिहास्यते।।1.13.17।।
இதைக்கேட்ட அவர்கள்
வசிஷ்டரிடம் வந்து, “தாங்கள் கூறிய படியே, எதையும் விட்டு விடாமல் எல்லா
ஏற்பாடுகளும் செய்து விட்டோம். இனிமேலும், தாங்கள் கூறிய படியே, எதையும் விட்டு
விடாமல், சரியாகச் செய்வோம்” என்று பதில் கூறினார்கள்.
ततस्सुमन्त्रमानीय
वसिष्ठो वाक्यमब्रवीत्।
निमन्त्रयस्व नृपतीन्पृथिव्यां ये च धार्मिका:।।1.13.18।।
பின்னர், வசிஷ்டர்
சுமந்திரரை அழைத்து, “ இந்தப் பூமியில் உள்ள தர்மத்தைக் கடைப் பிடிக்கும் அரசர்கள்
அனைவரையும் அழையுங்கள்.
ब्राह्मणान्क्षत्रियान्वैश्याञ्छूद्रांश्चैव
सहस्रश:।
समानयस्व सत्कृत्य सर्वदेशेषु मानवान्।।1.13.19।।
அனைத்து நாடுகளிலும்
வசிக்கும், ஆயிரக்கணக்கான அந்தணர்களையும், க்ஷத்திரியர்களையும், வைசியர்களையும்,
நான்காம் வர்ணத்தினரையும், மரியாதையுடன் அழையுங்கள். (பிற நாடுகளில் வர்ணாசிரமப்
பாகுபாடு இருக்கிறதா என்ற ஐயம் எழலாம். எல்லா நாடுகளிலும், கற்பிப்பவர்கள், ஆட்சி
செய்பவர்கள், விவசாயம், வாணிகம் ஆகியவை செய்பவர்கள், கட்டளைகளை நிறைவேற்றுபவர்கள்
ஆகியோர், உண்டு தானே!)
मिथिलाधिपतिं शूरं जनकं
सत्यविक्रमम्।
निष्ठितं सर्वशास्त्रेषु तथा वेदेषु निष्ठितम्।।1.13.20।।
तमानय महाभागं स्वयमेव सुसत्कृतम्।
पूर्वसम्बन्धिनं ज्ञात्वा तत: पूर्वं ब्रवीमि ते।।1.13.21।।
மிகச்சிறந்த
போர்வீரரும், உண்மையையே, தனது வலிமையாகக் கொண்டவரும், அனைத்து சாஸ்திரங்களிலும்,
விற்பன்னரும், மிதிலையின் அரசரும் ஆன புகழ் பெற்ற ஜனக மஹாராஜாவை, நீங்களே நேரில்
சென்று, அழையுங்கள். அவர் நமது பழைய நண்பர் என்பதால், முன்னமேயே உங்களுக்குச்
சொல்கிறேன்.
तथा काशीपतिं स्निग्धं
सततं प्रियवादिनम्।
वयस्यं राजसिंहस्य स्वयमेवानयस्व ह।।1.13.22।।
அதே போல், அன்பு
நிறைந்தவரும், இனிமையாகப் பேசுபவரும், அரசர்களுக்குள் சிங்கம் போன்றவரும், நல்ல நண்பரும்
ஆன காசி தேசத்து மன்னரை, நீங்களே சென்று அழைத்துக் கொண்டு வாருங்கள்.
तथा केकयराजानं वृद्धं
परमधार्मिकम्।
श्वशुरं राजसिंहस्य सपुत्रं त्वमिहानय।।1.13.23।।
பின்னர், சிறந்த
தார்மீகரானவரும், அரசர்களுள் சிங்கம் போன்றவரும், நம் அரசர் தசரதரின் மாமனாருமான,
வயது முதிர்ந்த கேகய தேசத்து அரசரையும், அவருடைய புதல்வர்களையும் அழைத்து
வாருங்கள்.
अङ्गेश्वरम् महाभागं
रोमपादं सुसत्कृतम्।
वयस्यं राजसिंहस्य समानय यशस्विनम्।।1.13.24।।
அரசர்களுள்
சிறந்தவரும், நமது அரசரின் நெருங்கிய
நண்பரும் ஆன, புகழ் பெற்ற அங்க தேசத்து
அரசர் ரோமபாதரை, கௌரவத்துடன் அழைத்து வாருங்கள்.
प्राचीनान्सिन्धु
सौवीरान्सौराष्ट्रेयांश्च पार्थिवान्।
दाक्षिणात्यान्नरेन्द्रांश्च समस्तानानयस्व ह।।1.13.25।।
கிழக்குத் திசையில்
உள்ள பழமையான தேசங்களின் மன்னர்களையும், சிந்து, சௌவீரம், சௌராஷ்டிரம் ஆகிய
தேசங்களின் மன்னர்களையும், தெற்குப்
பகுதியில் ஆட்சி செய்து வரும் மன்னர்களையும் அழையுங்கள்.
सन्ति स्निग्धाश्च ये
चान्ये राजान: पृथिवीतले।
तानानय यथाक्षिप्रं सानुगान्सह बान्धवान्।।1.13.26।।
இன்னும், இந்த
உலகத்தில், நம்முடன் நட்பு பாராட்டும் அரசர்கள் அனைவரையும், அவர்களுடைய குடும்பத்தினருடனும்,
பரிவாரங்களுடனும், அழையுங்கள்.”
वसिष्ठवाक्यं
तच्छ्रुत्वा सुमन्त्रस्त्वरितस्तदा।
व्यादिशत्पुरुषांस्तत्र राज्ञामानयने शुभान्।।1.13.27।।
வசிஷ்டரின்
வார்த்தைகளைக் கேட்ட சுமந்திரர், அந்த மன்னர்களையெல்லாம் அழைத்து வர ஆணையிட்டு,
மரியாதைக்குரிய மனிதர்களை அனுப்பினார்.
स्वयमेव हि धर्मात्मा प्रययौ मुनिशासनात्।
सुमन्त्रस्त्वरितो भूत्वा समानेतुं महीक्षित:।।1.13.28।।
முனிவரின் கட்டளைப்படி, நேரில் அழைக்கப்
படவேண்டிய ( ஜனகர் முதலாய) அரசர்களைத் தாமே சென்று அழைத்து வருவதற்காகச்
சுமந்திரர் விரைந்தார்.
ते च
कर्मान्तिकास्सर्वे वसिष्ठाय च धीमते।
सर्वं निवेदयन्ति स्म यज्ञे यदुपकल्पितम्।।1.13.29।।
கட்டளைகளைச் சரியாக
நிறைவேற்றிய அனைத்து வேலையாட்களும், தாங்கள் காரியங்களைச் செய்து முடித்ததை
அறிவிப்பதற்காக, அறிஞரான வசிஷ்டர் முன் கூடினார்கள்.
तत:प्रीतो द्विजश्रेष्ठस्तान्
सर्वानिदमब्रवीत् ।
अवज्ञया न दातव्यं कस्यचिल्लीलयाऽपि वा।।1.13.30।।
अवज्ञया कृतं हन्याद्दातारं नात्र संशय:। 28
அதைக் கேட்டு மகிழ்ந்த
வசிஷ்ட முனிவர் அவர்களிடம் கூறினார்,” யாருக்கும், எதையும், மரியாதையில்லாமலோ,
அலட்சியத்துடனோ, கொடுக்காதீர்கள். அவ்வாறு அசட்டையுடன் கொடுக்கப் படும் தானமானது,
தானம் கொடுத்தவருக்கே தீங்கு விளைவிக்கும். “
तत:
कैश्चिदहोरात्रैरुपयाता महीक्षित:।।1.13.31।।
बहूनि रत्नान्यादाय राज्ञो दशरथस्य वै।
இதற்கிடையில், இரவும் பகலும் பிரயாணித்துக்கொண்டு வந்த
அரசர்கள், தசரத மன்னருக்குப் பலவித ரத்தினங்களைப் பரிசாகக் கொண்டு வந்தார்கள்.
ततो वसिष्ठस्सुप्रीतो
राजानमिदमब्रवीत्।।1.13.32।।
उपयाता नरव्याघ्र राजानस्तव शासनात्।
मयापि सत्कृता: सर्वे यथार्हं राजसत्तमा:।।1.13.33।।
பின்னர், தசரத
மன்னரிடம், வசிஷ்ட முனிவர் மகிழ்ச்சியுடன் கூறினார், “மனிதர்களுள் சிறந்தவரே! தங்கள்
ஆணைப்படி, பல தேசங்களில் இருந்தும் மன்னர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம்
முறைப்படி வரவேற்று அவர்களுக்கேற்ற விருந்தோம்பலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்.
यज्ञीयं च कृतं राजन्
पुरुषैस्सुसमाहितै:।
निर्यातु च भवान्यष्टुं यज्ञायतनमन्तिकात्।।1.13.34।।
“அரசே! யாக விதிகளை
நன்றாக அறிந்துள்ளவர்கள் எல்லா ஏற்பாடுகளையும்
செய்திருக்கிறார்கள். அருகிலுள்ள யாக சாலைக்கு, யாகம் செய்வதற்காகத்
தாங்கள் எழுந்தருள வேண்டும்.”
सर्वकामैरुपहृतैरुपेतं
च समन्तत:।
द्रष्टुमर्हसि राजेन्द्र मनसेव विनिर्मितम्।।1.13.35।।
மன்னருள்
முதன்மையானவரே! கற்பனையால் உருவாக்கியதைப் போல, பலவிதமான மன மகிழ்ச்சி தரும்
பொருட்களுடன், நிர்மாணிக்கப் பட்டுள்ள யாக சாலையைத் தாங்கள் பார்க்க வேண்டும்.
तथा
वसिष्ठवचनादृश्यशृङ्गस्य चोभयो:।
शुभे दिवसनक्षत्रे निर्यातो जगतीपति:।।1.13.36।।
வசிஷ்டர்,
ருஷ்யஸ்ருங்கர் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி, நல்ல நக்ஷத்திரம் உடைய ஒரு நல்ல
நாளில், தசரதர், யாக சாலைக்குள் பிரவேசித்தார்.
ततो
वसिष्ठप्रमुखास्सर्व एव द्विजोत्तमा:।
ऋश्यशृङ्गं पुरस्कृत्य यज्ञकर्मारभन् तदा।।1.13.37।।
यज्ञवाटगतास्सर्वे यथाशास्त्रं यथाविधि। 3
அதைத் தொடர்ந்து, ருஷ்யஸ்ருங்கருடைய
தலைமையிலும், வசிஷ்டரின் வழிகாட்டுதலிலும், அந்தணஸ்ரேஷ்டர்கள், யாகத்திற்காக
அமைக்கப்பட்ட பகுதியில் பிரவேசித்து, சாஸ்திரங்களில் கூறியுள்ள விதி முறைகளின்
படி, யாகத்தைத் தொடங்கினார்கள்.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे त्रयोदशस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின்
ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் பதின்மூன்றாவது ஸர்க்கம்,
நிறைவு பெறுகிறது.
***
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment