ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 19
(தான் செய்யப்போகும்
வேள்வியைப் பாதுகாக்க ராமனைத் தன்னுடன் அனுப்புமாறு விஸ்வாமித்திரர் வேண்டுகோள்
விடுக்கிறார். தசரத மன்னர் அதைக்கேட்டுத் துயரப்படுகிறார்.)
तच्छ्रुत्वा राजसिंहस्य
वाक्यमद्भुतविस्तरम्।
हृष्टरोमा महातेजा विश्वामित्रोऽभ्यभाषत।।1.19.1।।
அரசர்களுள் சிங்கம்
போன்ற தசரத மன்னர் கூறிய அற்புதமான வார்த்தைகளைக் கேட்ட மகாதேஜஸ் உடைய விஸ்வாமித்திரர்,
மயிர்க் கூச்செறியும் மகிழ்ச்சியுடன் பதில் கூறினார்.
सदृशं राजशार्दूल
तवैतद्भुवि नान्यथा।
महावंशप्रसूतस्य वसिष्ठव्यपदेशिन:।।1.19.2।।
“அரசர்களுள் சிறந்தவரே!
புகழ்பெற்ற வம்சத்தில் பிறந்து, வசிஷ்டரிடம் உபதேசம் பெற்ற தாங்கள் இப்படிப்
பேசுவது தான் பொருத்தம்! தாங்கள் வேறு விதமாகப் பேசமுடியாது.
यत्तु मे हृद्गतं
वाक्यं तस्य कार्यस्य निश्चयम्।
कुरूष्व राजशार्दूल भव सत्यप्रतिश्रव:।।1.19.3।।
சிறந்த அரசரே! என்
உள்ளத்தில் இருக்கும் விஷயத்தைத் தங்களுக்குச் சொல்கிறேன். அது குறித்துத்
தீர்மானித்துத் தாங்கள் கொடுத்த வாக்கின் படி நடந்து கொள்ளுங்கள்.
अहंनियममातिष्ठे सिध्यर्थं पुरुषर्षभ।
तस्य विघ्नकरौ द्वौ तु राक्षसौ कामरूपिणौ।।1.19.4।।
மனிதருள் சிறந்தவரே!
ஒரு வேள்வியை நல்ல படியாகச் செய்து முடிப்பதற்காக நான் இப்போது விரதம்
அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறேன். நினைத்த உருவம் எடுக்கக்கூடிய இரண்டு ராக்ஷஸர்கள்
அந்த வேள்வியை நடத்த விடாமல் தடுக்கிறார்கள்.
व्रते मे बहुशश्चीर्णे समाप्त्यां राक्षसाविमौ।
मारीचश्च सुबाहुश्च वीर्यवन्तौ सुशिक्षितौ।।1.19.5।।
समांसरुधिरौघेण वेदिं तामभ्यवर्षताम्।
என் வேள்வி
பூர்த்தியாகும் நிலையில், மாரீசன், சுபாஹு என்னும் இரண்டு வலிமை நிறைந்த, நல்ல
கல்வி கற்ற ராக்ஷஸர்கள், மாமிசத்தையும், ரத்தத்தையும் அந்த வேள்விக் குண்டத்தில்
பொழிகிறார்கள்.
अवधूते तथाभूते
तस्मिन्नियमनिश्चये।।1.19.6।।
कृतश्रमो निरुत्साहस्तस्माद्देशादपाक्रमे।
வேள்வியைப் பூர்த்தி
செய்ய வேண்டும் என்னும் என்னுடைய தீர்மானம் நிறைவேறாமல் போய் விட்ட நிலையில், நான்
பட்ட சிரமங்கள் எல்லாம் வீணாகி, உத்ஸாகம் இழந்தவனாக, அந்த தேசத்தை விட்டு நான்
வந்து விட்டேன்.
न च मे
क्रोधमुत्स्रष्टुं बुद्धिर्भवति पार्थिव।।1.19.7।।
तथा भूता हि सा चर्या न शापस्तत्र मुच्यते।
அரசே! அவர்கள் மேல் என்
கோபத்தைக்காட்ட என் மனம் அனுமதிக்கவில்லை. இந்த வேள்வியின் போது சாபம் கொடுப்பது
தகாது.
स्वपुत्रं राजशार्दूल
रामं सत्यपराक्रमम्।।1.19.8।।
काकपक्षधरं शूरं ज्येष्ठं मे दातुमर्हसि।
அரசர்களுள்
சிரேஷ்டமானவரே! சத்தியத்தின் வலிமையுடையவனும், தலையின் இருபுறமும், அழகான குழல்
கற்றைகளை உடையவனும், வீரனுமான தங்கள் மகன் ராமனை எனக்குக் கொடுக்கக் கடவீர்கள்.
शक्तो ह्येष मया गुप्तो दिव्येन स्वेन तेजसा।।1.19.9।।
राक्षसा ये विकर्तारस्तेषामपि विनाशने।
ராமனை நான் நன்கு
காப்பாற்றுவேன். அவன், வேள்வியை நிறைவேறாமல் தடுக்கும் அந்த ராக்ஷஸர்களைத் தனது
தெய்வீக சக்தியால் அழிக்கும் வல்லமை படைத்தவன்.
श्रेयश्चास्मै
प्रदास्यामि बहुरूपं न संशय:।।1.19.10।।
त्रयाणामपि लोकानां येन ख्यातिं गमिष्यति।
அவனுக்கு நான்
நிச்சயம், பலவிதமான ஆசீர்வாதங்கள் கொடுப்பேன். அதனால் அவன் இந்த மூன்று
உலகங்களிலும், புகழ் பெறுவான்.
न च तौ राममासाद्य
शक्तौ स्थातुं कथञ्चन।।1.19.11।।
न च तौ राघवादन्यो हन्तुमुत्सहते पुमान्।
அவர்கள் இருவராலும் (மாரீசன்,
சுபாஹு) ராமனின் தாக்குதலைத் தாங்க முடியாது. ராமனைத்தவிர வேறு யாராலும், அவர்களை
அழிக்க முடியாது.
वीर्योत्सिक्तौ हि तौ
पापौ कालपाशवशं गतौ।।1.19.12।।
रामस्य राजशार्दूल न पर्याप्तौ महात्मन:।
தங்கள் வலிமையால் ஆணவம்
மிகுந்த அந்த இரண்டு ராக்ஷஸர்களும், யம பாசத்தால் இழுக்கப்பட்டிருக்கிறார்கள்.
அரசருள் சிறந்தவரே! மகாத்மாவான ராமனுடைய வீரத்துக்கு அவர்கள் ஈடாகமாட்டார்கள்.
न च पुत्रकृतस्नेहं
कर्तुमर्हसि पार्थिव।।1.19.13।।
अहं ते प्रतिजानामि हतौ तौ विद्धि राक्षसौ।
தங்கள் புதல்வன் (ராமன்
மேல்) இருக்கும் பாசத்தினால், அவனை என்னுடன் அனுப்பத் தயங்காதீர்கள். அவன்
நிச்சயம் அந்த ராக்ஷஸர்களை அழிப்பான். நான் தங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.
अहं वेद्मि महात्मानं
रामं सत्यपराक्रमम्।।1.19.14।।
वसिष्ठोऽपि महातेजा ये चेमे तपसि स्थिता:।
மகாத்மாவும், சத்ய
பராக்கிரமம் உடையவனும் ஆன ராமனை நான் அறிவேன். ஒளி மிகுந்த வசிஷ்டரும், தவத்தில்
நிலையாக இருக்கும் இந்த முனிவர்களும் அவனை அறிவார்கள்.
यदि ते धर्मलाभं च
यशश्च परमं भुवि।।1.19.15।।
स्थितमिच्छसि राजेन्द्र रामं मे दातुमर्हसि।
அரசர்களின் தலைவரே!
தங்களுக்குப் புண்ணியப் பேறும், இந்த உலகத்தில், சிறந்த புகழும் பெற வேண்டும் என்ற
ஆசை இருந்தால், ராமனை எனக்குத் தாங்கள் கொடுக்க வேண்டும்.
यदिह्यनुज्ञां
काकुत्स्थ ददते तव मन्त्रिण:।।1.19.16।।
वसिष्ठप्रमुखा: सर्वे ततो रामं विसर्जय।
ககுஸ்த வம்சத்தவரே!
தங்கள் அமைச்சர்களும், வசிஷ்டர் முதலாய குருமார்களும், ராமனை என்னுடன் அனுப்பத்
தங்களுக்கு அனுமதி அளித்தால், அவனை என்னுடன் அனுப்பி வையுங்கள்.
अभिप्रेतमसंसक्तमात्मजं
दातुमर्हसि।।1.19.17।।
दशरात्रं हि यज्ञस्य रामं राजीवलोचनम्।
தாமரை போன்ற கண்களை
உடையவனும், யார் மேலும் பாரபட்சம் காட்டாதவனும், எதன் மேலும் பற்று இல்லாதவனுமான
ராமனைப் பத்து நாட்கள் என்னுடன் இருக்கும் படி அனுப்பிக்கொடுங்கள்.
नात्येति कालो यज्ञस्य
यथाऽयं मम राघव।।1.19.18।।
तथा कुरुष्व भद्रं ते मा च शोके मन: कृथा:।
ரகு வம்சத்தோன்றலே!
எனது வேள்வி நடைபெறுவதில் தாமதம் ஆகாமல் இருக்குமாறு செய்யுங்கள்.
துயரப்படாதீர்கள். உங்களுக்கு நன்மை உண்டாகட்ட்டும்!
इत्येवमुक्त्वा
धर्मात्मा धर्मार्थसहितं वच:।।1.19.19।।
विरराम महातेजा विश्वामित्रो महामुनि:।
இப்படிப்பட்ட தர்மம்
நிறைத்த சொற்களைக் கூறிய பின்னர், ஒளிமிகுந்த தவமுனிவரான விஸ்வாமித்திரர்
அமைதியாகி விட்டார்.
स तन्निशम्य राजेन्द्रो
विश्वामित्रवचश्शुभम्।।1.19.20।।
शोकमभ्यगमत्तीव्रं व्यषीदत भयान्वित:।
விஸ்வாமித்திரரின்
மங்களகரமான வார்த்தைகளைக் கேட்ட தசரத மன்னர், மிகுந்த அச்சமும், துயரமும் அடைந்தார்.
इति हृदयमनोविदारणं
मुनिवचनं तदतीव शुश्रुवान्।
नरपतिरभवन्महांस्तदा
व्यथितमना: प्रचचाल चासनात्।।1.19.21।।
மகா மன்னரான தசரதர்
விஸ்வாமித்திர முனிவரின் வார்த்தைகளைக் கேட்டு ஆடிப்போனார். அவருடைய மனம்
தாங்கவொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்தது.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे एकोनविंशस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின்
ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் பத்தொன்பதாவது ஸர்க்கம்,
நிறைவு பெறுகிறது.
***
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment