ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 28
((விஸ்வாமித்திரர் ராமனுக்கு மேலும் பல அஸ்திரங்களைக் கொடுக்கிறார்.)
प्रतिगृह्य ततोऽस्त्राणि प्रहृष्टवदनश्शुचि:।
गच्छन्नेव च काकुत्स्थो विश्वामित्रमथाब्रवीत्।।1.28.1।।
தன்னைத் தூய்மைப்
படுத்திக்கொண்டு ராமன் விஸ்வாமித்திரர் கொடுத்த அஸ்திரங்களைப் பெற்றுக்கொண்ட
பிறகு, போகும் வழியில் அவரிடம் கூறினான்:
गृहीतास्त्रोऽस्मि
भगवन् दुराधर्षस्सुरैरपि।
अस्त्राणां त्वहमिच्छामि संहारं मुनिपुङ्गव।।1.28.2।।
“பகவன்! தேவர்களுக்கும்
கிடைக்காத இந்த அஸ்திரங்களை அடைந்ததால், நான் யாராலும் தாக்க முடியாதவனாகி
விட்டேன். இந்த அஸ்திரங்களை எவ்வாறு திரும்ப அழைப்பது என்பதையும் தெரிந்து கொள்ள
விரும்புகிறேன்.”
एवं ब्रुवति काकुत्स्थे
विश्वामित्रो महामुनि:।
संहारं व्याजहाराथ धृतिमान् सुव्रतश्शुचि:।।1.28.3।।
காகுஸ்தனான ராமன்
இவ்வாறு கேட்கவும், துணிவும், திடவிரதமும், தூய்மையும் நிறைந்த விஸ்வாமித்திரர்
அந்த அஸ்திரங்களைத் திரும்ப அழைக்கும் விதத்தை விளக்கினார்.
सत्यवन्तं सत्यकीर्तिं
धृष्टं रभसमेव च।
प्रतिहारतरं नाम पराङ्मुखमवाङ्मुखम्।।1.28.4।।
लक्षाक्षविषमौ चैव दृढनाभसुनाभकौ।
दशाक्षशतवक्त्रौ च दशशीर्षशतोदरौ।।1.28.5।।
पद्मनाभमहानाभौ दुन्दुनाभसुनाभकौ।
ज्योतिषं कृशनं चैव नैराश्यविमलावुभौ।।1.28.6।।
योगन्धरहरिद्रौ च दैत्यप्रशमनौतथा।
सार्चिर्माली धृतिर्माली वृत्तिमान् रुचिरस्तथा।।1.28.7।।
पितृसौमनसं चैव विधूतमकरावुभौ।
करवीरकरं चैव धनधान्यौ च राघव।।1.28.8।।
कामरूपं कामरुचिं मोहमावरणं तथा।
जृम्भकं सर्वनाभं च सन्तानवरणौ तथा।।1.28.9।।
भृशाश्वतनयान् राम भास्वरान्कामरूपिण:।
प्रतीच्छ मम भद्रं ते पात्रभूतोऽसि राघव।।1.28.10।।
“ராகவனே! என்னிடமிருந்து ப்ருசாஸ்வரின்
புதல்வர்களான, நினைத்த படி உருவம் மாறக்கூடிய, சத்யவந்தன், சத்யகீர்த்தி,
த்ருஷ்டன், ரபஸன், ப்ரதிஹாரதரன், பராங்க்முகன், அவாங்க்முகன், லக்ஷாக்ஷன், விஷமன்,த்ருடநாபன்,
சுநாபன், தசாக்ஷன், சதவக்த்ரன், தச சீர்ஷன், சதோதரன், பத்ம நாபன், மகா நாபன்,
துந்து நாபன், சுநாபகன், ஜ்யோதிஷன், குஷணன், நைராஷ்யன், விமலன், யோகந்தரன், ஹரித்ரன்,
தைத்யன், ப்ரசமனன், சார்சிர்மாலி, த்ருதி, மாலி, வ்ருத்திமான், ருசிரன்,
பித்ருஸௌமனசன், விதூதன், மகரன், கரவீரகரன், தனன், தான்யன், காமரூபன், காமருசி,
மோஹன், ஆவரணன், ஜ்ரும்பகன்,சர்வ நாபன், சந்தானன், வரணன், ஆகிய இந்த ஒளி மிகுந்த
அஸ்திரங்களைப் பெற்றுக்கொள். இவற்றுக்குத் தகுதியுடையவனாக உன்னை ஆக்கிக்கொள்.
உனக்கு மங்களம் உண்டாகட்டும்!”
बाढमित्येव काकुत्स्थ:
प्रहृष्टेनान्तारात्मना।
दिव्यभास्वरदेहाश्च मूर्तिमन्तस्सुखप्रदा:।।1.28.11
केचिदङ्गारसदृशा: केचिद्धूमोपमास्तथा।
चन्द्रार्कसदृशा: केचित्प्रह्वाञ्जलिपुटास्तथा।।1.28.12।।
रामं प्राञ्जलयो भूत्वाऽब्रुवन् मधुरभाषिण:।
इमे स्म नरशार्दूल शाधि किं करवाम ते।।1.28.13।।
“நிச்சயம் அவ்வாறே
செய்கிறேன்.” என்று கூறி, மிகுந்த மன மகிழ்வுடன் ராமன் அந்த அஸ்திரங்களைப்
பெற்றுக்கொண்டான். அந்த அஸ்திர தேவதைகளுள் சில கரியைப் போலக் கருப்பு நிறந்திலும்,
சில புகையைப் போலவும், சில சூரிய மற்றும் சந்திர கிரணங்களைப் போன்றும் இருந்தன.
தெய்வீக வடிவம் கொண்ட அந்த அஸ்திரங்கள், குனிந்து இரு கைகளையும் கூப்பி ராமனை
வணங்கி, மென்மையாகக் கூறின: “மனிதர்களுள் புலி போன்றவரே! நாங்கள் இங்கே தயாராக
இருக்கிறோம். தங்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடுங்கள்.”
मानसा: कार्यकालेषु
साहाय्यं मे करिष्यथ।
गम्यतामिति तानाह यथेष्टं रघुनन्दन:।।1.28.14।।
ராமன் அந்த அஸ்திர
தேவதைகளிடம், “என் மனத்தில் இருந்து கொண்டு, எனக்குத் தேவைப் படும் போது உதவி
செய்யுங்கள். இப்போது நீங்கள் உங்கள் விருப்பம் போல், எங்கு வேண்டுமானாலும் போகலாம்.”
अथ ते राममामन्त्ऱ्य
कृत्वा चापि प्रदक्षिणम्।
एवमस्त्विति काकुत्स्थमुक्त्वाजग्मुर्यथाऽगतम्।।1.28.15।।
“அப்படியே ஆகட்டும்” என்று கூறிய அந்த
அஸ்திர தேவதைகள், ராமனை வலம் வந்து
அவனிடம் விடை பெற்ற பின்னர், தங்களுடைய இடங்களுக்குத் திரும்பிச் சென்றன.
स च तान् राघवो
ज्ञात्वा विश्वामित्रं महामुनिम्।
गच्छन्नेवाथ मधुरं श्लक्ष्णं वचनमब्रवीत्।।1.28.16।।
அந்த அஸ்திரங்களை
உபயோகப்படுத்தும் முறையை முழுவதும் கற்றுக் கொண்ட பின்னர், விஸ்வாமித்திரருடன்
நடந்து செல்லும் போது, இனிமையான குரலில் ராமன் மென்மையாகப் பேசினான்.
किन्न्वेतन्मेघसङ्काशं
पर्वतस्याविदूरत:।
वृक्षषण्डमितो भाति परं कौतूहलं हि मे।।1.28.17।।
दर्शनीयं मृगाकीर्णं मनोरममतीव च।
नानाप्रकारैश्शकुनैर्वल्गुनादैरलङ्कृतम्।।1.28.18।।
“மலைக்கு அருகில் உள்ள
இந்தப் பகுதியில், மேகத்தைப் போல, மிக அழகாகவும், விலங்குகள் நிறைந்தும், மனதுக்கினிய
பலவிதமான பறவைகளின் இனிமையான கூக்குரல்களால் அலங்கரிக்கப்பட்ட மரங்களுடனும்
விளங்கும். இந்த இடம் என்ன இடம்? அதைப் பற்றித் தெரிந்து கொள்ள நான் மிகவும்
ஆவலுடன் இருக்கிறேன்.”
निस्सृता: स्म मुनिश्रेष्ठ कान्ताराद्रोमहर्षणात्।
नया त्ववगच्छामि देशस्य सुखवत्तया।।1.28.19।।
सर्वं मे शंस भगवन् कस्याश्रमपदं त्विदम्।
“முனிசிரேஷ்டரே!
மயிர்க்கூச்செறியும் அனுபவங்களைத் தந்த காட்டிலிருந்து வெளிவந்து விட்டோம் என்பது,
இந்த இடத்தின் இனிமையான் உணர்வால் புரிகிறது. பகவன்! இது யாருடைய ஆசிரம்? எனக்கு
எல்லாம் சொல்லுங்கள்.
सम्प्राप्ता यत्र ते
पापा ब्रह्मघ्ना दुष्टचारिण:।।1.28.20।।
तव यज्ञस्य विघ्नाय दुरात्मानो महामुने।
भगवन् तस्य को देशस्सा यत्र तव याज्ञिकी।।1.28.21।।
रक्षितव्या क्रिया ब्रह्मन्मया वध्याश्च राक्षसा:।
एतत्सर्वं मुनिश्रेष्ठ श्रोतुमिच्छाम्यहं प्रभो।।1.28.22।।
மகா முனிவரே! முனிசிரேஷ்டரே! மரியாதைக்குரிய அந்தணரே! அந்தணர்களைக் கொல்லும்,
கொடிய உள்ளமுள்ள பாவிகள் எங்கிருந்து வந்து தங்கள் வேள்விக்கு இடைஞ்சல்
விளைவிக்கிறார்கள்? நான் பாதுகாக்க வேண்டிய வேள்வித்தளம் எது? இந்த ராக்ஷஸர்களை
எங்கு கொல்ல வேண்டும்? இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.”
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் இருபத்தெட்டாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment