ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 33
(குச நாபன் தன்
புதல்வியரின் தைரியத்தையும், அவர்கள் வாயுதேவன் மேல் காட்டிய சகிப்புத்தன்மையையும்
புகழ்கிறார். பிரம்மதத்தனின் பிறப்பு. குச நாபனின் புதல்வியரைப் பிரம்ம தத்தன்
திருமணம் செய்து கொள்ளுதல்.)
तस्य तद्वचनं श्रुत्वा कुशनाभस्य धीमत:।
शिरोभिश्चरणौ स्पृष्ट्वा कन्याशतमभाषत।।1.33.1।।
அறிவாற்றல் மிகுந்த குச
நாபன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட அந்த நூறு பெண்களும், அவருடைய காலில் விழுந்து
வணங்கி, இவ்வாறு கூறினார்கள்:
वायुस्सर्वात्मको राजन्
प्रधर्षयितुमिच्छति।
अशुभं मार्गमास्थाय न धर्मं प्रत्यवेक्षते।।1.33.2।।
“அரசே!
எல்லாஉயிர்களுக்குள்ளும் சஞ்சரிக்கும் வாயுவானவர், அதர்மமான வழியில் சென்று எங்கள்
மானத்தைக் கெடுக்க நினைத்தார்.
पितृमत्यस्स्म भद्रं ते
स्वच्छन्दे न वयं स्थिता:।
पितरं नो वृणीष्व त्वं यदि नो दास्यते तव।।1.33.3।।
“எங்களுக்கு அன்பான
தந்தை இருக்கிறார். ஆகவே, நாங்கள் சுதந்திரமாகத் தீர்மானம் செய்ய முடியாது.
வேண்டுமானால், எங்களை உங்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பாரா என்று எங்கள்
தந்தையாரைக் கேளுங்கள்.”
तेन पापानुबन्धेन वचनं
न प्रतीच्छता।
एवं ब्रुवन्त्यस्सर्वास्स्म वायुना निहता भृशम्।।1.33.4।।
நாங்கள் இப்படிப்
பேசிக்கொண்டிருக்கும் போதே, அதை ஏற்காமல், பாபாத்மாவான வாயு எங்களைத் தாக்கினார்.
तासां तद्वचनं श्रुत्वा
राजा परमधार्मिक:।
प्रत्युवाच महातेजा: कन्याशतमनुत्तमम्।।1.33.5।।
பரம தார்மிகரான, அந்த
சக்தி வாய்ந்த அரசர், தனது நூறு இணையற்ற புதல்விகளின் சொற்களைக் கேட்டு, இவ்வாறு
பதில் கூறினார்:
क्षान्तं क्षमावतां
पुत्र्य: कर्तव्यं सुमहत्कृतम्।
ऐकमत्यमुपागम्य कुलं चावेक्षितं मम।।1.33.6।।
‘புதல்வியரே! நீங்கள்
அனைவரும் ஒற்றுமையாக முடிவெடுத்து, மிகவும் பொறுமையுடன் இருந்து, என் குலப்
பெருமையைக் காப்பாற்றி இருக்கிறீர்கள்.
अलङ्कारो हि नारीणां
क्षमा तु पुरुषस्य वा।
दुष्करं तच्च यत् क्षान्तं त्रिदशेषु विशेषत:।।1.33.7।।
यादृशी व: क्षमा पुत्र्यस्सर्वासामविशेषत:।
ஆண்களுக்காயினும் சரி,
பெண்களுக்காயினும் சரி, பொறுமையே முக்கியமான அணிகலன். தேவர்களுக்குக் கூட இது
கடினம். அதுவும், எந்த அபிப்பிராய பேதமும் இன்றி இவ்வாரு நீங்கள் முடிவெடுத்தது
மிகவும் கடினமானது.
क्षमा दानं क्षमा यज्ञः क्षमा सत्यं हि पुत्रिका:।।1.33.8।।
क्षमा यश: क्षमा धर्म: क्षमया निष्ठितं जगत्।
பொறுமை தான் தானம்,
பொறுமை தான் யக்ஞம், பொறுமை தான் சத்தியம், பொறுமை தான் புகழ் சேர்க்கும். பொறுமை
தான் தர்மம். புதல்வியரே! இந்த உலகமே, பொறுமையால் தான் தாங்கப்பட்டு நிற்கிறது.”
विसृज्य कन्या: काकुत्स्थ राजा त्रिदशविक्रम:।।1.33.9।।
मन्त्रज्ञो मन्त्रयामास प्रदानं सह मन्त्रिभि:।
देशकालौ प्रदानस्य सदृशे प्रतिपादनम्।।1.33.10।।
“ராமா! தன் புதல்வியரை
அங்கிருந்து அனுப்பி விட்டுத் தேவர்களை யொத்த சக்தியுடையவரும், சிறந்த அறிவாற்றல்
உள்ளவருமான அந்த அரசர், தனது அமைச்சர்களிடம், தனது புதல்வியருக்குப் பொருத்தமான
ஒருவரையும், எப்போது, எங்கு அவர்களின் திருமணம் நடக்க வேண்டும் என்பதையும் பற்றிக்
கலந்தாலோசித்தார்.
एतस्मिन्नेव काले तु
चूली नाम महातपा:।
ऊर्ध्वरेताश्शुभाचारो ब्राह्मं तप उपागमत्।।1.33.11।।
அந்தச் சமயத்தில்
மகாதபஸ்வியும் பிரம்மச்சாரியும், நன்னடத்தை உடையவருமான சூலி என்பவர் பிரம்மத்தை
அடைய வேண்டித் தவம் செய்து கொண்டிருந்தார்.
तप्यन्तं तमृषिं तत्र
गन्धर्वी पर्युपासते।
सोमदा नाम भद्रं ते ऊर्मिला तनया तदा।।1.33.12।।
அப்போது, தவம் செய்து
கொண்டிருக்கிற அந்த ரிஷிக்கு, ஊர்மிளை என்பவளின் மகளான ஸோமதா என்னும் ஒரு
கந்தர்வப் பெண் சேவை செய்து வந்தாள்.
सा च तं प्रणता भूत्वा
शुश्रूषणपरायणा।
उवास काले धर्मिष्ठा तस्यास्तुष्टोऽभवद्गुरु:।।1.33.13।।
ஸோமதா மிக்க பணிவுடன்
அவருக்குச் சேவை செய்து தர்மம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தாள். அந்த சேவையால் அந்த ரிஷி மிகவும் மகிழ்ந்தார்.
स च तां कालयोगेन
प्रोवाच रघुनन्दन।
परितुष्टोऽस्मि भद्रं ते किं करोमि तव प्रियम्।।1.33.14।।
காலப்போக்கில், தனது
தவம் நிறைவடைந்த பிறகு, சூலி என்னும் அந்த ரிஷி அவளிடம் கூறினார்: ”உனக்கு நன்மை
உண்டாகட்டும். உன் சேவையால் நான் மகிழ்ந்தேன். நான் உனக்கு என்ன வரம் கொடுக்கட்டும்?”
परितुष्टं मुनिं
ज्ञात्वा गन्धर्वी मधुरस्वरा।
उवाच परमप्रीता वाक्यज्ञा वाक्यकोविदम्।।1.33.15।।
அந்த ரிஷியானவர் தனது
சேவையால் திருப்தி அடைந்திருக்கிறார் என்பதைக் கண்ட, இனிமையான குரலுடைய அந்தக்
கந்தர்வ மங்கை, அன்புடன் அந்த ரிஷியிடம் கூறினாள்:
लक्ष्म्या समुदितो
ब्राह्म्या ब्रह्मभूतो महातपा:।
ब्राह्मेण तपसा युक्तं पुत्रमिच्छामि धार्मिक।।1.33.16।।
“மகாதபஸ்வியே! பிரம்ம
தேஜஸ் நிறைந்த நீங்கள் பிரம்மாவைப் போலவே காணப்படுகிறீர்கள். தர்ம வழி நடப்பவரே!
அந்தணர்களுக்குரிய தவ நெறிகளுடன் கூடிய ஒரு மகன் எனக்கு வேண்டும்.
अपतिश्चास्मि भद्रं ते
भार्या चास्मि न कस्यचित्।
ब्राह्मेणोपगतायाश्च दातुमर्हसि मे सुतम्।।1.33.17।।
எனக்குக் கணவன் இல்லை.
நான் யாருக்கும் மனைவி அல்ல. நான் தங்களையே சரணடைந்துள்ளேன். தங்களுடைய தவத்தின்
ஆற்றலால் எனக்கு ஒரு மகனைத் தாங்கள்
கொடுக்க வேண்டும்.”
तस्या: प्रसन्नो
ब्रह्मर्षिर्ददौ पुत्रमनुत्तमम्।
ब्रह्मदत्त इति ख्यातं मानसं चूलिनस्सुतम्।।1.33.18।।
அவளுடைய சேவையை மெச்சிய
பிரம்மரிஷி சூலியானவர் பிரம்மதத்தன் என்ற பெயருள்ள ஒரு மானஸ புத்திரனை உருவாக்கி, அவளுக்கு
வழங்கினார்.
स राजा सौमदेयस्तु पुरीमध्यवसत्तदा।
कांपिल्यां परया लक्ष्म्या देवराजो यथा दिवम्।।1.33.19।।
அந்த பிரம்ம தத்தன்
அரசனாகி, காம்பில்யம் என்ற நகரை, தேவேந்திரன் தேவலோகத்தை ஆள்வதைப் போல, மிகுந்த
செழிப்புடன் ஆண்டு வந்தான்.
स बुद्धिं कृतवान् राजा कुशनाभस्सुधार्मिक:।
ब्रह्मदत्ताय काकुत्स्थ दातुं कन्याशतं तदा।।1.33.20।।
காகுஸ்தனே! சிறந்த
தார்மிகனான ராஜா குச நாபன் தனது நூறு கன்னிகைகளையும் அந்த பிரம்மதத்தனுக்குத்
திருமணம் செய்து கொடுக்கத் தீர்மானித்தார்.
तमाहूय महातेजा ब्रह्मदत्तं महीपति:।
ददौ कन्याशतं राजा सुप्रीतेनान्तरात्मना।।1.33.21।।
மிகவும் சக்தி வாய்ந்த
அரசனாகிய குச நாபன் மிகுந்த மகிழ்ச்சியுடன் மனதாரத் தனது நூறு புதல்வியரை
பிரம்மதத்தனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.
यथाक्रमं तत: पाणीन्
जग्राह रघुनन्दन।
ब्रह्मदत्तो महीपालस्तासां देवपतिर्यथा।।1.33.22।।
ரகு நந்தனா! தேவேந்திரனைப்
போன்ற ராஜா பிரம்மதத்தன் முறைப்படி அந்தக் கன்னிகையரின் கைகளைப் பிடித்தான்.
स्पृष्टमात्रे तत: पाणौ
विकुब्जा विगतज्वरा:।
युक्ता: परमया लक्ष्म्या बभु: कन्याशतं तदा।।1.33.23।।ृ32
அவனுடைய கை அவர்கள்
மேல் பட்ட மாத்திரத்திலேயே, அந்தக் கன்னிகையருடைய கூன் முதுகுகள் நேராகித், துன்பம் நீங்கி, (முன் போல்) மிக அழகானவர்களாக ஒளிர்ந்தார்கள்.
स दृष्ट्वा वायुना
मुक्ता: कुशनाभो महीपति:।
बभूव परमप्रीतो हर्षं लेभे पुन:पुन:।।1.33.24।।
தன் புதல்விகள்
வாயுவின் பிடியில் இருந்து விடுபட்டதைக் கண்ட ராஜா குச நாபன் மீண்டும் மீண்டும்
மகிழ்ச்சி அடைந்தார்.
कृतोद्वाहं तु राजानं
ब्रह्मदत्तं महीपति:।
सदारं प्रेषयामास सोपाध्यायगणं तदा।।1.33.25।।
தனது மனைவிகளுடன்
சேர்ந்து, புரோகிதர்கள் முன்னிலையில், தனது புதல்வியருக்குத் திருமணம் செய்து
முடித்தபின், ராஜா குச நாபன் அவர்களை, பிரம்மதத்தனுடன் அனுப்பி வைத்தார்.
सोमदाऽपि सुसंहृष्टा
पुत्रस्य सदृशीं क्रियाम्।
यथान्यायं च गन्धर्वी स्नुषास्ता: प्रत्यनन्दत।।1.33.26।।
(பிரம்ம தத்தனின்
தாயாரான) ஸோமதாவும் தனது மருமகள்களைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து, தனது மகனை
அவனுடைய செயலுக்காகப் பாராட்டினாள்.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे त्रयस्त्रिंशस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின்
ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் முப்பத்து மூன்றாவது ஸர்க்கம்,
நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment