Monday, 25 December 2023

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 38

 (பேரரசரான சகரர் சந்ததி வேண்டி யாகம் செய்கிறார்.)

तां कथां कौशिको रामे निवेद्य कुशिकात्मज:।
पुनरेवापरं वाक्यं काकुत्स्थ मिदमब्रवीत्।।1.38.1।।

அந்தக் கதையை ராமனுக்குச் சொல்லி முடித்த கௌசிகரான விஸ்வாமித்திரர் மீண்டும் கூறலானார்:


अयोध्याधिपति श्शूर: पूर्वमासीन्नराधिप:।
सगरो नाम धर्मात्मा प्रजाकामस्स चाप्रज:।।1.38.2।।

வெகு காலத்துக்கு முன், அயோத்தி நகரை சகரன் என்ற பெயருள்ள மகாவீரரும் தர்மாத்மாவுமான ஒரு அரசர் ஆண்டு வந்தார். குழந்தையில்லாத அவர் ஒரு குழந்தை வேண்டும் என்று விரும்பினார்.

 

वैदर्भदुहिता राम केशिनी नाम नामत:।
ज्येष्ठा सगरपत्नी सा धर्मिष्ठा सत्यवादिनी।।1.38.3।।

“ராமா! உண்மையானவளும், தர்ம வழியில் செல்பவளுமான, விதர்ப்ப நாட்டின் ராஜகுமாரி கேசினி என்பவள் அவருடைய மூத்த மனைவி.

 

अरिष्टनेमेर्दुहिता रूपेणाप्रतिमा भुवि।
द्वितीया सगरस्यासीत्पत्नी सुमतिसंज्ञिता ।।1.38.4।।

அரிஷ்ட நேமியின் மகளும், இந்த உலகிலேயே, இணையற்ற அழகியுமான சுமதி என்பவள் அவருடைய இரண்டாவது மனைவி.

 

ताभ्यां सह महाराज: पत्नीभ्यां तप्तवांस्तप:।
हिमवन्तं समासाद्य भृगुप्रस्रवणे गिरौ।।1.38.5।।

மகாராஜா சகரர் தன் இரு மனைவிகளுடனும், இமய மலைக்குச் சென்று அங்கே, ‘ப்ருகுப்ரஸ்ரவனம்’ என்னும் சிகரத்தில் இருந்து கொண்டு, கடுமையான தவத்தில் ஈடுபட்டார்.

 

अथ वर्षशते पूर्णे तपसाऽराधितो मुनि:।
सगराय वरं प्रादाद्भृगुस्सत्यवतां वर:।।1.38.6।।

நூறு ஆண்டுகள் அவ்வாறு தவம் செய்த பின்னர், அவருடைய தவத்தால் மகிழ்ந்த, சிறந்த சத்தியவானான ப்ருகு மகரிஷி அவருக்கு ஒரு வரம் தந்தார்.

 

अपत्यलाभस्सुमहान् भविष्यति तवानघ।
कीर्तिं चाप्रतिमां लोके प्राप्स्यसे पुरुषर्षभ।।1.38.7।।

 “பாவமற்றவனே! மனிதருள் சிறந்தவனே! நீ மிகச் சிறந்த சந்ததியையும் இணையற்ற புகழையும் அடைவாய்!

 

एका जनयिता तात पुत्रं वंशकरं तव।
षष्ठिं पुत्रसहस्राणि अपरा जनयिष्यति।।1.38.8।।

உன்னுடைய ஒரு மனைவி, உன் வம்சத்தை விளங்கச் செய்யும் ஒரு புதல்வனைப் பெறுவாள். மற்றவள் அறுபதாயிரம் புத்திரர்களைப் பெறுவாள்” என்று ப்ருகு கூறினார்.

 

भाषमाणं महात्मानं राजपुत्र्यौ प्रसाद्य तम्।
ऊचतु: परमप्रीते कृताञ्जलिपुटे तदा।।1.38.9।।

அதன் பிறகு, அந்த இரண்டு ராஜகுமாரிகளும், மிகவும் மகிழ்ந்து, மகாத்மாவன ப்ருகு முனிவரை வணங்கி, இவ்வாறு கூறினார்கள்:

 

एक: कस्यास्सुतो ब्रह्मन् का बहून् जनयिष्यति।
श्रोतुमिच्छावहे ब्रह्मन् सत्यमस्तु वचस्तव।।1.38.10।।

 “பிரம்மத்தை உணர்ந்தவரே! எங்களிருவரில் யார் ஒரு மகனைப் பெறுவார்கள், யார் நிறைய மகன்களைப் பெறுவார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறோம். உங்கள் வாக்கு உண்மையாகட்டும்.”

 

तयोस्तद्वचनं श्रुत्वा भृगु: परमधार्मिक:।
उवाच परमां वाणीं स्वच्छन्दोऽत्र विधीयताम्।।1.38.11।।

அவர்கள் சொன்னதைக் கேட்ட பரம தார்மிகரான ப்ருகு, இனிமையாகக் கூறினார்,”நீங்கள் அதை உங்கள் விருப்பப்படி தீர்மானித்துக் கொள்ளுங்கள்.”

 

एको वंशकरो वाऽस्तु बहवो वा महाबला:।
कीर्तिमन्तो महोत्साहा: का वा कं वरमिच्छति।।1.38.12।।

வம்சத்தை விளங்க வைக்கும் ஒரு புதல்வன் யாருக்கு வேண்டும்? பெரும் புகழும் மிகுந்த உற்சாகமும் நிறைந்த அநேக புதல்வர்கள் யாருக்கு வேண்டும்?

 

मुनेस्तु वचनं श्रुत्वा केशिनी रघुनन्दन।
पुत्रं वंशकरं राम जग्राह नृपसन्निधौ।।1.38.13।।

ரகு நந்தனா! முனிவரின் சொற்களைக்கேட்ட கேசினி, வம்சத்தை விளங்க வைக்கும் ஒரு மகன் தனக்கு வேண்டும் என்று, அரசன் சகரனின் முன்னிலையில் கேட்டாள்.

 

षष्ठिं पुत्रसहस्राणि सुपर्णभगिनी तदा।
महोत्साहान् कीर्तिमतो जग्राह सुमति: सुतान्।।1.38.14।।

பின்னர், கருடனின் சகோதரியான சுமதி, பெருத்த உற்சாகமும், பெரும்புகழும் உடைய அறுபதாயிரம் புதல்வர்கள் வேண்டும் என்று கேட்டாள்.

 

प्रदक्षिणमृषिं कृत्वा शिरसाऽभिप्रणम्य च।
जगाम स्वपुरं राजा सभार्यो रघुनन्दन ।।1.38.15।।

ரகு நந்தனா! பின்னர் சகரர் அந்த முனிவரை வலம் வந்து தலைகுனிந்து, இருகரம் கூப்பி, அவரை வணங்கித் தன் மனைவிகளுடன், தனது நாட்டுக்குத் திரும்பினார்.

 

अथ काले गते तस्मिन् ज्येष्ठा पुत्रं व्यजायत।
असमञ्ज इति ख्यातं केशिनी सगरात्मजम्।।1.38.16।।

சிறிது காலம் சென்ற பின்னர், மூத்த மனைவியான கேசினி அசமஞ்சஸ் என்ற பெயருடைய ஒரு மகனைப் பெற்றாள்.

 

सुमतिस्तु नरव्याघ्र गर्भतुम्बं व्यजायत।
षष्ठि: पुत्रसहस्राणि तुम्बभेदाद्विनि:सृता:।।1.38.17।।

மனிதருள் சிறந்தவனே! சுமதியோ, ஏராளமான கருக்கள் நிறைந்த ஒரு கர்ப்ப பிண்டத்தைப் பெற்றாள். அதிலிருந்து, அறுபதினாயிரம் புதல்வர்கள் உண்டானார்கள்.

 

घृतपूर्णेषु कुम्भेषु धात्र्यस्तान् समवर्धयन्।
कालेन महता सर्वे यौवनं प्रतिपेदिरे।।1.38.18।।

தாதிமார்கள் அந்தக் குழந்தைகளை நெய் நிறைந்த கும்பங்களில் வைத்துக் காப்பாற்றி வந்தார்கள்.

अथ दीर्घेण कालेन रूपयौवनशालिन:।
षष्टि: पुत्रसहस्राणि सगरस्याभवंस्तदा।।1.38.19।।

அந்த அறுபதாயிரம் புதல்வர்களும், காலப் போக்கில் வளர்ந்து, அழகும் இளமையும் நிறைந்து விளங்கினார்கள்.

 

स च ज्येष्ठो नरश्रेष्ठ सगरस्यात्मसम्भव:।
बालान् गृहीत्वा तु जले सरय्वा रघुनन्दन।।1.38.20।।

प्रक्षिप्य प्रहसन्नित्यं मज्जतस्तान् समीक्ष्य वै।

மனிதருள் சிறந்தவனே! சகரருடைய மூத்த மகனான அஸமஞ்சஸ் குழந்தைகளைப் பிடித்து, ஸரயு நதியில் வீசி எறிந்து அவர்கள்  நீரில் மூழ்குவதைப் பார்த்து சிரிப்பான்.

 

एवं पापसमाचारस्सज्जनप्रतिबाधक:।।1.38.21।।
पौराणामहिते युक्त: पुत्रो निर्वासित: पुरात्।

தீயகுணம் கொண்ட, நல்ல குடிமக்களைத் துன்புறுத்தக்கூடிய, தீய செயல்களில் நாட்டம் கொண்ட அந்த மகனை அரசன் நாடு கடத்தி விட்டான்.

 

तस्य पुत्रोंऽशुमान्नाम असमञ्जस्य वीर्यवान्।।1.38.22।।
सम्मत स्सर्वलोकस्य सर्वस्यापि प्रियंवद:।

அஸமஞ்சஸுக்கு அம்சுமான் என்றொரு மகன் இருந்தான். அவன் சிறந்த வீரனாகவும், அனைவருக்கும் பிரியமானவனாகவும், பிரியமாகப் பேசுபவனாகவும் இருந்தான்.

 

तत: कालेन महता मतिस्समभिजायत।।1.38.23।।
सगरस्य नरश्रेष्ठ यजेयमिति निश्चिता।

மனிதருள் சிறந்தவனே! வெகு காலம் சென்ற பிறகு, சகரர், ஒரு யாகம் செய்ய வேண்டும் என்று நிச்சயித்தார்.

 

 

स कृत्वा निश्चयं राम सोपाध्यायगणस्तदा।।1.38.24।।

यज्ञकर्मणि वेदज्ञो यष्टुं समुपचक्रमे।

ராமா! யாகம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தவுடனே, அவர், சிறந்த புரோகிதர்களுடன் சேர்ந்து அதற்கான ஆயத்தங்களைச் செய்யலானார்.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे अष्टात्रिंशस्सर्ग:

 

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் முப்பத்தெட்டாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/



 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...