ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 40
(பிரம்மா தேவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.
சகரரின் புதல்வர்கள் தொடர்ந்து தோண்டிக்கொண்டே, யாகக் குதிரையைத் தேடுகிறார்கள்.
கபிலரின் அருகில் அதைக் காண்கிறார்கள். அவரால் சபிக்கப்பட்டு அனைவரும் சாம்பலாகிறார்கள்.)
देवतानां वचश्श्रुत्वा भगवान्वै पितामह:।
प्रत्युवाच सुसन्त्रस्तान्कृतान्तबलमोहितान्।।1.40.1।।
மிகவும் பயந்த நிலையில்,
விதிவசத்தால், தங்கள் அறிவைக்கூட உபயோகப் படுத்தமுடியாத நிலையில் இருந்த அந்த
தேவர்களைப் பார்த்து, பகவான் பிரம்மதேவர் இவ்வாறு பதிலிறுத்தார்.
यस्येयं
वसुधा कृत्स्ना वासुदेवस्य धीमतः|
महिषी माधवस्यैषा स एव भगवान् प्रभुः|| १-४०-२
कापिलं रूपमास्थाय धारयत्यनिशं धराम् |
तस्य कोपाग्निना दग्धा भविष्यन्ति नृपात्मजाः || १-४०-३
यस्येयं वसुधा कृत्स्ना वासुदेवस्य
धीमत:।
कापिलं रूपमास्थाय धारयत्यनिशं धराम्।।1.40.2।।
तस्य कोपाग्निना दग्धा भविष्यन्ति नृपात्मजा:।
இந்த பூமி முழுவதும் அனைத்தையும்
அறிந்த வாசுதேவனுக்குச் சொந்தமானது. அவர் தான் கபிலர் வடிவில் இந்த பூமியைத்
தாங்குகிறார். சகரருடைய புத்திரர்கள் கபிலருடைய கோபாக்கினியில் எரிந்து போவார்கள்.
पृथिव्याश्चापि निर्भेदोऽदृष्ट एव
सनातन:।।1.40.3।।
सगरस्य च पुत्राणां विनाशोऽदीर्घजीविनाम्।
குறைந்த ஆயுள் கொண்ட சகரருடைய
புத்திரர்களால் இந்தப் பூமி தோண்டப்படும் என்பதும், அவர்கள் அழிந்து போவார்கள்
என்பதுவும் முன்னமேயே விதிக்கப்பட்டது தான்.”
पितामहवचश्श्रुत्वा
त्रयस्त्रिंशदरिन्दम।।1.40.4।।
देवा: परमसंहृष्टा: पुनर्जग्मुर्यथागतम्।
பிதாமகரான பிரம்மதேவரின்
சொற்களைக்கேட்ட தேவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ந்து வந்த வழியே திரும்பிச்
சென்றார்கள்.
सगरस्य च पुत्राणां
प्रादुरासीन्महात्मनाम्।।1.40.5।।
पृथिव्यां भिद्यमानायां निर्घातसमनिस्वन:।
மகாத்மாவான சகரருடைய புத்திரர்களால்
பூமி பிளக்கப் பட்ட போது, இடி இடித்தது போல பலத்த சத்தம் கேட்டது.
ततो भित्वा महीं सर्वे कृत्वा
चाभिप्रदक्षिणम्।।1.40.6।।
सहिता स्सगरास्सर्वे पितरं वाक्यमब्रुवन्।0
பின்னர், சகரருடைய புத்திரர்கள்அனைவரும்,
பூமியைத் தோண்டிய பிறகு, அதை வலம் வந்த பின் தங்கள் தந்தையிடம் இவ்வாறு
கூறினார்கள்:
परिक्रान्ता मही सर्वा सत्त्ववन्तश्च
सूदिता:।।1.40.7।।
देवदानवरक्षांसि पिशाचोरगकिन्नरा:।
न च पश्यामहेऽश्वं तमश्वहर्तारमेव च।।1.40.8।।
किं करिष्याम भद्रं ते बुद्धिरत्र विचार्यताम्।
“இந்தப்பூமி முழுவதையும்
தோண்டிவிட்டோம். சக்திவாய்ந்த தேவர்கள், அசுரர்கள், ராக்ஷசர்கள், பிசாசர்கள்,
நாகர்கள், கின்னரர்கள் அனேகம் பேர் கொல்லப்பட்டு விட்டார்கள். ஆயினும், அந்தக்
குதிரையையோ, அதைத் திருடியவனையோ எங்களால் பார்க்க முடியவில்லை. ஆகவே, இதைப் பற்றி யோசித்து, மேற்கொண்டு என்ன
செய்ய வேண்டும் என்று கட்டளையிடுங்கள். “
तेषां तद्वचनं श्रुत्वा पुत्राणां
राजसत्तम:।।1.40.9।।
समन्युरब्रवीद्वाक्यं सगरो रघुनन्दन।
ரகு நந்தனா! தனது புதல்வர்களின்
இந்தச் சொற்களைக் கேட்டு மிகுந்த கோபம் அடைந்த
சகரர் கூறினார்:
भूय: खनत भद्रं वो निर्भिद्य
वसुधातलम्।।1.40.10।।
अश्वहर्तारमासाद्य कृतार्थाश्च निवर्तथ।
“பூமியைத் திரும்பவும் தோண்டுங்கள். அந்தக்
குதிரைத் திருடனைக் கண்டுபிடித்து, காரியத்தை வெற்றிகரமாய் முடித்து வாருங்கள்.
உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்!”
पितुर्वचनमासाद्य सगरस्य
महात्मन:।।1.40.11।।
षष्टि: पुत्रसहस्राणि रसातलमभिद्रवन्।
தங்கள் தந்தையாரின் கட்டளைப்படி,
சகரரின் அறுபதாயிரம் புத்திரர்கள், பாதாளத்தை (பூமிக்குக் கீழ் இருக்கும்) நோக்கி
ஓடினார்கள்.
खन्यमाने ततस्तस्मिन् ददृशु: पर्वतोपमम्।।1.40.12।।
दिशागजं विरूपाक्षं धारयन्तं महीतलम्।
அங்கே மேற்கொண்டு தோண்டும் போது,
அங்கே, பூமியைத் தாங்கிக்கொண்டிருக்கும்,
மலை போன்ற உருவமுடைய ‘விரூபாக்ஷம்’ என்ற திக்கஜத்தைக் கண்டார்கள்.
सपर्वतवनां कृत्स्नां पृथिवीं
रघुनन्दन।।1.40.13।।
शिरसा धारयामास विरूपाक्षो महागज:।
ரகு நந்தனா! அந்த விரூபாக்ஷம் என்னும்
பலம் பொருந்திய பெரிய யானையானது மலைகளுடனும், காடுகளுடனும் கூடிய இந்த பூமியைத்
தாங்கிக் கொண்டிருந்தது.
यदा पर्वणि काकुत्स्थ विश्रमार्थं
महागज:।।1.40.14।।
खेदाच्चालयते शीर्षं भूमिकम्पस्तदाभवेत्।
காகுஸ்தனே! அந்த பலம் பொருந்திய
திக்கஜம் எப்போதாவது களைப்படைந்து சற்றே தலையை அசைக்கும் போது பூகம்பம்
ஏற்படுகிறது.
तं ते प्रदक्षिणं कृत्वा दिशापालं
महागजम्।।1.40.15।।
मानयन्तो हि ते राम जग्मुर्भित्त्वा रसातलम्।
ராமா! அவர்கள் அந்த திக்கஜத்தை வலம்
வந்து வணங்கி, அதற்கு மரியாதை செலுத்தி விட்டு மேலும் தோண்டிப் பாதாளத்தை
அடைந்தார்கள்.
तत: पूर्वां दिशं भित्त्वा दक्षिणां
बिभिदु: पुन:।।1.40.16।।
दक्षिणस्यामपि दिशि ददृशुस्ते महागजम्।
महापद्मं महात्मानं सुमहत्पर्वतोपमम्।।1.40.17।।
शिरसा धारयन्तं ते विस्मयं जग्मुरुत्तमम्।
பின்னர் கிழக்கு திசையில் தோண்டிப்
பார்த்த பிறகு, தெற்கு திசையைத் தோண்டி, அங்கே, பெரிய மலையை ஒத்த ‘மகாபத்மம்’ என்ற
மகத்தான யானை, தன் தலையால் பூமியைத் தாங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியம்
அடைந்தார்கள்.
तत: प्रदक्षिणं कृत्वा सगरस्य
महात्मन:।।1.40.18।।
षष्टि: पुत्रसहस्राणि पश्चिमां बिभिदुर्दिशम्।
அந்த யானையை வலம் வந்து வணங்கிய பிறகு
சகரருடைய புதல்வர்கள் மேற்கு திசையை அடைந்து அங்கே தோண்டினார்கள்.
पश्चिमायामपि दिशि
महान्तमचलोपमम्।।1.40.19।।
दिशागजं सौमनसं ददृशुस्ते महाबला:।
மேற்கு திசையிலும், பெரிய மலையை ஒத்த,
மிகுந்த வலிமையுடைய ‘சௌமனஸம்’ என்னும் யானையைக் கண்டார்கள்.
तं ते प्रदक्षिणं कृत्वा पृष्ट्वा
चापि निरामयम्।
खनन्त स्समुपक्रान्ता दिशं हैमवतीं तत:।।1.40.20।।
அந்த யானையை வலம் வந்து வணங்கி அதன்
நலன் விசாரித்துவிட்டு, மேலும் தோண்டிக் கொண்டே வடக்கு திசையை அடைந்தார்கள்.
उत्तरस्यां रघुश्रेष्ठ
ददृशुर्हिमपाण्डुरम्।।1.40.21।।
भद्रं भद्रेण वपुषा धारयन्तं महीमिमाम्।
ரகுவம்சத்தினருள் சிறந்தவனே! அந்த
வடக்குத் திசையில் பனியைப் போல வெண்மை நிறமுடைய ‘பத்ரன்’ என்ற பெரிய யானை பூமியைத்
தாங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள்.
समालभ्य तत स्सर्वे कृत्वा चैनं
प्रदक्षिणम्।।1.40.22।।
षष्टि: पुत्रसहस्राणि बिभिदुर्वसुधातलम्।
பின்னர், அந்த அறுபதாயிரம்
அரசகுமாரர்களும் அந்த யானையை வலம் வந்து வணங்கி விட்டு, மேலும் பூமியைத்
துளைத்தார்கள்.
तत: प्रागुत्तरां गत्वा सागरा:
प्रथितां दिशम्।।1.40.23।।
रोषादभ्यखनन् सर्वे पृथिवीं सगरात्मजा:।
பின்னர், சகரரின் புத்திரர்கள்,
வடகிழக்கு திசையை நோக்கிச் சென்று மிகுந்த கோபத்துடன் பூமியைத் தோண்டினார்கள்.
ते तु सर्वे महात्मानो भीमवेगा
महाबला:।।1.40.24।।
ददृशु: कपिलं तत्र वासुदेवं सनातनम्।
हयं च तस्य देवस्य चरन्तमविदूरत:।।1.40.25।।
प्रहर्षमतुलं प्राप्तास्सर्वे ते रघुनन्दन।
ரகு நந்தனா! மகாபலம் பொருந்திய அந்த
சகர புத்திரர்கள், மிகுந்த வேகத்துடன் தோண்டிய போது, அழிவற்ற வாசுதேவரைக் கபிலரின்
உருவத்தில் கண்டார்கள். யாகக் குதிரையும் அவர்க்கு அருகிலேயே மேய்ந்து
கொண்டிருந்ததைக் கண்ட அவர்கள் அளவற்ற மகிழ்ச்சி கொண்டார்கள்.
ते तं हयवरं ज्ञात्वा
क्रोधपर्याकुलेक्षणा:।।1.40.26।।
खनित्रलाङ्गलधरा नानावृक्षशिलाधरा:।
अभ्यधावन्त सङ्क्रुद्धास्तिष्ठ तिष्ठेति चाब्रुवन्।।1.40.27।।
அந்த உத்தமமான குதிரையை அடையாளம்
தெரிந்து கொண்ட அவர்கள், மிகுந்த கோபத்துடன், ஈட்டிகளையும், கலப்பைகளையும்,
மரங்களையும், கற்களையும் எடுத்துக்கொண்டு, ‘இரு, இரு’ என்று கத்திக்கொண்டு கபிலரை
நோக்கிப் பாய்ந்தார்கள்.
अस्माकं त्वं हि तुरगं यज्ञीयं
हृतवानसि।
दुर्मेधस्त्वं हि सम्प्राप्तान् विद्धि नस्सगरात्मजान् ।।1.40.28।।
“தீய புத்தி உள்ளவனே! நீ எங்களுடைய
யாகக் குதிரையைத் திருடி இருக்கிறாய். இங்கு வந்திருக்கும் நாங்கள் சகரரின்
புதல்வர்கள் என்பதைத் தெரிந்து கொள்.” என்றார்கள்.
श्रुत्वा तु वचनं तेषां कपिलो
रघुनन्दन।
रोषेण महताऽऽविष्टो हुङ्कारमकरोत्तदा।।1.40.29।।
ரகு நந்தனா! அவர்களுடைய வார்த்தைகளைக்
கேட்ட கபிலர், அளவுகுக்கு மீறிய கோபத்துடன், பெரிய ஹூங்காரம் செய்தார்.
ततस्तेनाप्रमेयेन कपिलेन महात्मना।
भस्मराशीकृतास्सर्वे काकुत्स्थ सगरात्मजा:।।1.40.30।।
காகுஸ்தனே! அந்த சகரரின்
புத்திரர்கள், கற்பனைக் கெட்டாத சக்தியுடைய அந்தக் கபிலரின் ஹூங்காரத்தால்,
எரிந்து சாம்பலானார்கள்.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे चत्वारिंशस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் நாற்பதாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment