Monday, 8 January 2024

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 47

( மருத்துக்களின் பிறப்பு; விசாலர் நகரத்தை நிர்மாணிக்கிறார்; திதி தவம் மேற்கொள்கிறாள்; சுமதி விஸ்வாமித்திரரை கௌரவிக்கிறார்.)


सप्तधातु कृते गर्भे दिति: परमदु:खिता।
सहस्राक्षं दुराधर्षं वाक्यं सानुनयाऽब्रवीत्।।1.47.1।।

தனது கரு ஏழு துண்டுகளானதால் மிகுந்த துயரம் அடைந்த திதியானவள், இந்திரனிடம் பணிவுடன் கூறினாள்:

 

ममापराधाद्गर्भोऽयं सप्तधा विफलीकृत:।
नापराधोऽस्ति देवेश तवात्र बलसूदन।।1.47.2।।

“தேவேந்திரனே! நான் செய்த குற்றத்தால், எனது கரு ஏழு துண்டுகளாகி வீணாகிவிட்டது. இதில் உனது குற்றம் எதுவும் இல்லை.”

 

प्रियं तु कर्तुमिच्छामि मम गर्भविपर्यये।
मरुतां सप्तसप्तानां स्थानपाला भवन्त्विमे।।1.47.3।।

துரதிருஷ்ட வசமாக, எனது கர்ப்பம் துண்டாகி விட்டது.  நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். இந்த ஏழு துண்டுகளும், மருத்துக்களாகிக், காற்றின் பகுதிகளின் காவலர்களாக ஆகவேண்டும்.

 

वातस्कन्धा: इमे सप्त चरन्तु दिवि पुत्रक ।
मारुता इति विख्याता दिव्यरूपा ममात्मजा:।।1.47.4।।
 

 “மகனே! மிக்க அழகு வாய்ந்த எனது புதல்வர்களாகிய இவர்கள், காற்றின் பகுதிகளை ஆட்சி செய்பவர்களாகி, மாருதர்கள் என்ற பெயருடன் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் சுற்றித் திரியட்டும்.

 

ब्रह्मलोकं चरत्वेक इन्द्रलोकं तथाऽपर:।
दिवि वायुरिति ख्यातस्तृतीयोऽपि महायशा:।।1.47.5।।

ஒருவன் பிரம்ம லோகத்தில் சஞ்சரிக்கட்டும். இன்னொருவன் இந்திர லோகத்தில் சுற்றித் திரியட்டும். மற்றொருவன் வாயு என்ற பெயருடன் ஆகாயத்தில் வலம் வரட்டும்.

 

चत्वारस्तु सुरश्रेष्ठ दिशो वै तव शासनात्।
सञ्चरिष्यन्तु भद्रं ते देवभूता ममात्मजा:।।1.47.6।।

தேவேந்திரனே! உனது ஆணையால், மற்ற நால்வரும் நான்கு திசைகளில் சஞ்சரிக்கட்டும்.”

 

तस्यास्तद्वचनं श्रुत्वा सहस्राक्ष: पुरन्दर:।
उवाच प्राञ्जलिर्वाक्यं दितिं बलनिषूदन:।।1.47.7।।

திதியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தேவேந்திரன் இரு கைகளையும் கூப்பிக் கொண்டு, திதியிடம் கூறினான்:


सर्वमेतद्यथोक्तं ते भविष्यति न संशय:।
विचरिष्यन्ति भद्रं ते देवभूतास्तवात्मजा:।।1.47.8।।

 “தாங்கள் கூறியது போலவே அனைத்தும் நடக்கும். தங்கள் புதல்வர்கள் தேவர்களைப் போலவே எல்லா இடங்களிலும் சஞ்சரிப்பார்கள். தங்களுக்கு நன்மை உண்டாகட்டும்.”

 

एवं तौ निश्चयं कृत्वा मातापुत्रौ तपोवने।
जग्मतुस्त्रिदिवं राम कृतार्थाविति नश्श्रुतम्।।1.47.9।।

 “ராமா! அந்தத் தாயும், அவளுடைய புதல்வர்களும், தங்களது விருப்பம் நிறைவேறியவர்களாக, தேவலோகம் திரும்பிச் என்றார்கள் என்று கேள்விப்படுகிறோம்.

 

एष देशस्स काकुत्स्थ महेन्द्राध्युषित: पुरा।
दितिं यत्र तपस्सिद्धामेवं परिचचार स:।।1.47.10।।

காகுஸ்தனே! ( நாம் இப்போது இருக்கும்) இந்த இடத்தில் தான் தேவேந்திரன் வசித்து வந்தான். இந்த இடத்தில் தான் திதிக்கு அவன் சேவை செய்ததும், திதி அவளுடைய தவத்தின் பயனை அடைந்ததும். (மருத்துக்ககள் உண்டானதும்.)

 

इक्ष्वाकोऽस्तु नरव्याघ्र पुत्र: परमधार्मिक:।।1.47.11।।

अलम्बुषायामुत्पन्नो विशाल इति विश्रुत:।
तेन चासीदिह स्थाने विशालेति पुरी कृता।।1.47.12।।

ராமா! இக்ஷ்வாகு வம்சத்தில் அலம்புசம் என்னும் இடத்தில் விசாலன் என்ற நற்குணங்கள் நிறைந்த, புகழ் பெற்ற மகன் பிறந்தான். அவன் பெயரால் இங்கு விசாலம் என்ற நகரம் உருவாக்கப்பட்டது.

 

विशालस्य सुतो राम हेमचन्द्रो महाबल:।
सुचन्द्र इति विख्यात: हेमचन्द्रादनन्तर:।।1.47.13।।

ராமா! பலம் பொருந்திய ஹேமசந்திரன் என்பவன் விசாலனுடைய மகன். ஹேமசந்திரனுக்குப் பின்னர் சுசந்திரன் என்பவன் ஆட்சிக்கு வந்தான்.

 

सुचन्द्रतनयो राम धूम्राश्व इति विश्रुत:।
धूम्राश्वतनयश्चापि सञ्जयस्समपद्यत।।1.47.14।।

ராமா! சுசந்திரனுடைய மகன் புகழ் பெற்ற தூம்ராஸ்வன் என்பவன். தூம்ராஸ்வனுக்கு சஞ்சயன் என்னும் மகன் பிறந்தான்.

 

सञ्जयस्य सुतश्श्रीमान् सहदेव: प्रतापवान्।
कुशाश्वस्सहदेवस्य पुत्र: परमधार्मिक:।।1.47.15।।

சஞ்சயனுடைய மகன் செல்வமும் வலிமையும் மிக்க சஹதேவன். சஹதேவனுக்குக் குசாஸ்வன் என்னும் பரம தார்மிகனான மகன் பிறந்தான்.

 

कुशाश्वस्य महातेजा सोमदत्त: प्रतापवान्।
सोमदत्तस्य पुत्रस्तु काकुत्स्थ इति विश्रुत:।।1.47.16।।

மகா தேஜஸ் உடைய சோமதத்தன் குசாஸ்வனுடைய புதல்வன். சோமதத்தனுடைய மகன் புகழ் பெற்ற இக்ஷ்வாகு என்பவன்.


तस्य पुत्रो महातेजा: सम्प्रत्येष पुरीमिमाम्।
आवसत्यमरप्रख्यस्सुमतिर्नाम दुर्जय:।।1.47.17।।

அந்த இக்ஷ்வாகுவின் புதல்வனான, தேவர்களுக்கு நிகரானவனும், மகா தேஜஸ் உடையவனும், யாராலும் வெல்ல முடியாதவனுமான சுமதி என்பவன் இப்போது இந்த நகரத்தை ஆண்டு வருகிறான்.

 

इक्ष्वाकोस्तु प्रसादेन सर्वे वैशालिका नृपा:।
दीर्घायुषो महात्मानो वीर्यवन्तस्सुधार्मिका:।।1.47.18।।

இக்ஷ்வாகுவின் ஆசியால், விசாலனுடைய வம்சத்தில் பிறந்த அரசர்கள் அனைவரும்,  நீண்ட ஆயுள் உடையவர்களாகவும், மகாத்மாக்களாகவும், வீரம் பொருந்தியவர்களாகவும், தார்மீகர்களாகவும் இருந்து வந்திருக்கிறார்கள்.

 

इहाद्य रजनीं राम सुखं वत्स्यामहे वयम्।
श्व: प्रभाते नरश्रेष्ठ जनकं द्रष्टुमर्हसि।।1.47.19।।

ராமா! இன்றைய இரவை இங்கேயே சுகமாகக் கழிக்கலாம். நாளை விடிந்ததும், ஜனகரைப் பார்ப்பதற்குச் செல்லலாம். “

 

सुमतिस्तु महातेजा विश्वामित्रमुपागतम्।
श्रुत्वा नरवरश्रेष्ठ: प्रत्युद्गच्छन्महायशा:।।1.47.20।।

மகாதேஜஸ் உடைய மன்னனான புகழ்பெற்ற சுமதி, விஸ்வாமித்திரர் அங்கு வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அவரை எதிர்கொண்டு அழைக்க வந்தான்.

 

पूजां च परमां कृत्वा सोपाध्यायस्सबान्धव:।
प्राञ्जलि: कुशलं पृष्ट्वा विश्वामित्रमथाब्रवीत्।।1.47.21।।

தனது புரோகிதர்களுடனும், உறவினர்களுடனும் வந்து, அவரைப் பூஜித்துக் கைகளைக் கூப்பிக் கொண்டு, அவருடைய நலம் விசாரித்து விட்டு இவ்வாறு கூறினான்:

 

धन्योऽस्म्यनुगृहीतोऽस्मि यस्य मे विषयं मुनि:।
सम्प्राप्तो दर्शनं चैव नास्ति धन्यतरो मम।।1.47.22।।

முனிவரே! தாங்கள் என்னுடைய நாட்டுக்கு வந்து எனக்கு அனுக்ரஹம் செய்துள்ளீர்கள். என்னை விட பாக்கியசாலி யாருமே இல்லை.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे सप्तचत्वारिंशस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின்  நாற்பத்தேழாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...