ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 49
(தேவர்கள் இந்திரன் இழந்த ஆண்மையை மீண்டும்
பெறச் செய்கிறார்கள். ராமன் அகல்யையை மீண்டும் புனிதமாக்குகிறான். கௌதமரும்
அகல்யையும் ராமனுக்கு உபசாரம் செய்கிறார்கள்.)
अफलस्तु ततश्शक्रो
देवानग्निपुरोगमान्।
अब्रवीत्त्रस्तवदनस्सर्षिस्सङ्घान् सचारणान्।।1.49.1।।
தனது விரைப்பையை இழந்த
இந்திரன் மிகவும் பயந்தவனாய், ரிஷிகளுடனும், சாரணர்களுடனும் கூடிய, அக்கினியை
முன்னிருத்திய தேவர்கள் குழாத்தைப் பார்த்துப் பேசினான்:
कुर्वता तपसो विघ्नं
गौतमस्य महात्मन:।
क्रोधमुत्पाद्य हि मया सुरकार्यमिदं कृतम्।।1.49.2।।
வேள்விகளை நிறைவேற
விடாமல் செய்யும் தேவகாரியத்தைத் தான் நான் செய்தேன். அப்படிச் செய்த போது,
மகாத்மாவான கௌதமருடைய கோபத்துக்கு ஆளானேன்.
अफलोऽस्मि कृतस्तेन
क्रोधात्सा च निराकृता।
शापमोक्षेण महता तपोऽस्यापहृतं मया।।1.49.3।।
கௌதமரின் கோபத்தால்,
நான் எனது விரைப்பையை இழந்தேன். அகல்யையை அவர் விட்டு விட்டுச் சென்று விட்டார்.
கௌதமர் இப்படிப் பட்ட சாபம் கொடுத்ததால், தனது தபோபலத்தை இழந்து விட்டார்.
तस्मात्सुरवरास्सर्वे
सर्षिस्सङ्घास्सचारणा: ।
सुरसाह्यकरं सर्वे सफलं कर्तुमर्हथ।।1.49.4।।
ஆகவே, ரிஷிகள்,
சாரணர்கள், தேவர்கள் ஆகிய நீங்கள் எல்லாரும் சேர்ந்து உங்களுக்கு உதவி செய்யப்போய்,
நான் இழந்த என்னுடைய விரைப்பையை மீண்டும் பெறுமாறு செய்ய வேண்டும்.”
शतक्रतोर्वचश्श्रुत्वा
देवास्साग्निपुरोगमा:।
पितृदेवानुपेत्याहु स्सह सर्वैर्मरुद्गणै:।।1.49.5।।
இந்திரன் கூறிய
சொற்களைக்கேட்ட தேவர்கள், மருத்துக்களுடன் சேர்ந்து, அக்கினியை முன்
நிறுத்திக்கொண்டு, பித்ரு தேவதைகளிடம் ( ஒரு ஆண் செம்மறியாட்டைக் கூட்டிச்) சென்று
அவர்களிடம் இவ்வாறு கூறினார்கள்:
अयं मेषस्सवृषणश्शक्रो
ह्यवृषण: कृत:।
मेषस्य वृषणौ गृह्य शक्रायाऽशु प्रयच्छथ।।1.49.6।।
“இந்த செம்மறியாட்டுக் கிடாவுக்கு
விதைப் பைகள் இருக்கின்றன. ஆனால், இந்திரனுக்கு அவை இல்லை. ஆகவே, இந்த ஆட்டின்
விதைப் பைகளை எடுத்து இந்திரனுக்குப் பொருத்த வேண்டும்.
अफलस्तु कृतो मेष: परां तुष्टिं प्रदास्यति।
भवतां हर्षणार्थाय ये च दास्यन्ति
मानवा:।।1.49.7।।
விரைப்பை இல்லாத இந்த
செம்மறியாட்டுக்கிடா உங்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கும். இப்படிப்பட்ட ஆட்டை
உங்களுக்கு அளிக்கும் மனிதர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்”
अग्नेस्तु वचनं
श्रुत्वा पितृदेवास्समागता:।
उत्पाट्य मेषवृषणौ सहस्राक्षे न्यवेशयन्।।1.49.8।।
அக்கினியின் சொற்களைக்
கேட்ட பித்ருதேவதைகள் ஆட்டுக்கிடாவின் விரைப் பைகளை எடுத்து இந்திரனுக்குப்
பொருத்தி விட்டார்கள்.
तदा प्रभृति काकुत्स्थ पितृदेवास्समागता:।
अफलान् भुञ्जते मेषान् फलैस्तेषामयोजयन्।।1.49.9।।
காகுஸ்தனே!
அப்போதிருந்து பித்ரு தேவதைகளுக்கு விரைப்பையை எடுத்த பின்னே ஆட்டுக்கிடா நிவேதனம்
செய்யப்படுகிறது.
इन्द्रस्तु
मेषवृषणस्तदाप्रभृति राघव।
गौतमस्य प्रभावेन तपसश्च महात्मन:।।1.49.10।।
ராகவா! அப்போதிருந்து,
கௌதமரின் தவத்தின் மகிமையால், இந்திரன் ஆட்டிக்கிடாவின் விரைப்பைகளையே
வைத்திருக்கிறான்.
तदागच्छ महातेज आश्रमं
पुण्यकर्मण:।
तारयैनां महाभागामहल्यां देवरूपिणीम्।।1.49.11।।
மகா தேஜஸ்வியான ராமா!
ஆகவே, புண்ணியம் செய்த கௌதவரின் ஆசிரமத்துக்குள் பிரவேசித்து, பாக்கியசாலியான,
தெய்வீக வடிவம் கொண்ட அகல்யைக்கு சாபவிமோசனம் கொடு.”
विश्वामित्रवचश्श्रुत्वा
राघवस्सहलक्ष्मण:।
विश्वामित्रं पुरस्कृत्य तमाश्रममथाविशत्।।1.49.12।।
விஸ்வாமித்திரர்
இவ்வாறு கூறியவுடன், விஸ்வாமித்திரர் முன்னே செல்ல, ராமன், லக்ஷ்மணனுடன் அவரைப்
பின் தொடர்ந்து ஆசிரமத்துக்குள் பிரவேசித்தான்.
ददर्श च महाभागां तपसा
द्योतितप्रभाम्।
लोकैरपि समागम्य दुर्निरीक्ष्यां सुरासुरै:।।1.49.13।।
प्रयत्नान्निर्मितां धात्रा दिव्यां मायामयीमिव।
स तुषारावृतां साभ्रां पूर्णचन्द्रप्रभामिव।।1.49.14।।
मध्येंऽभसो दुराधर्षां दीप्तां सूर्यप्रभामिव।
தவத்தின் மகிமையால்
ஜ்வலித்துக்கொண்டிருந்த, மனிதராலும், தேவர்களாலும், அசுரர்களாலும், பார்க்க
முடியாத, மகாபாக்கியசாலியான அகல்யையை
ராமன் பார்த்தான். அவள் தெய்வீகமாக, பிரம்மாவினுடைய விசேஷ முயற்சியால், மாயையால்
உண்டாக்கப்பட்டவள் போல் காணப்பட்டாள். தெளிவாகத்தெரியாவிட்டாலும், முழு நிலவானது
மேகங்களால் மறைக்கப்பட்டு
மங்கலாகத்தெரிவது போலவும், சூரியனின் ஒளியானது நீரில் பட்டுப் பிரதிபலிப்பது
போலவும் காணப்பட்டாள்.
सा हि गौतमवाक्येन
दुर्निरीक्ष्या बभूव ह।।1.49.15।।
त्रयाणामपि लोकानां यावद्रामस्य दर्शनम्।
கௌதமருடைய வார்த்தைகளின்
சக்தியால், ராமனைத் தரிசிக்கும் வரை மூன்று உலகங்களிலும், யாருடைய கண்ணுக்கும்
தெரியாதவளாக அகல்யை இருந்தாள்.
शापस्यान्तमुपागम्य
तेषां दर्शनमागता।।1.49.16।।
राघवौ तु ततस्तस्या: पादौ जगृहतुस्तदा।
சாப விமோசனம்
கிடைத்தவுடன் அவள் எல்லாருடைய கண்ணுக்கும் தெரிந்தாள். அதன் பின் ராம லக்ஷ்மணர்கள்
அவளுடைய பாதத்தைத் தொட்டு வணங்கினர்.
स्मरन्ती गौतमवच:
प्रतिजग्राह सा च तौ।।1.49.17।।
पाद्यमर्घ्यं तथाऽऽतिथ्यं चकार सुसमाहिता।
प्रतिजग्राह काकुत्स्थो विधिदृष्टेन कर्मणा।।1.49.18।।
கௌதமருடைய ஆணையை
நினைவில் கொண்டு, அகல்யை ராமனுக்கு பாத்யம், அர்க்கியம் முதலியவற்றை அளித்து,
முறைப்படி உபசாரம் செய்தாள். ராமனும், அந்த உபசாரங்களை ஏற்றுக்கொண்டான்.
पुष्पवृष्टिर्महत्यासीद्देवदुन्दुभिनिस्वनै:।
गन्धर्वाप्सरसां चैव महानासीत्समागम:।।1.49.19।।
அப்போது தேவ துந்துபிகள்
முழங்கின; தேவர்கள் மலர்மாரி பொழிந்தார்கள். கந்தர்வர்களும், அப்சரஸ்களும்,
தேவர்களும் அங்கே வந்து குழுமினார்கள்.
साधु साध्विति
देवास्तामहल्यां समपूजयन्।
तपोबलविशुद्धाङ्गी गौतमस्य वशानुगाम्।।1.49.20।।
கௌதமரின் ஆணைப்படி,
தவம் செய்து தன் உடலைப் புனிதப் படுத்திக்கொண்ட அகல்யையைப் பார்த்த தேவர்கள்
மகிழ்வுடன், ‘மிக நன்று’ என்று பாராட்டினார்கள்.
गौतमोऽपि महातेजा
अहल्यासहितस्सुखी।
रामं सम्पूज्य विधिवत्तपस्तेपे महातपा:।।1.49.21।।
மகா தேஜஸ்வியான
கௌதமரும் அங்கே வந்து, அகல்யையுடன் சேர்ந்து ராமனை முறைப்படி பூஜித்த பின்னர்
தவத்தைத் தொடர்ந்தார்.
रामोऽपि परमां पूजां
गौतमस्य महामुने:।
सकाशाद्विधिवत्प्राप्य जगाम मिथिलां तत:।।1.49.22।।
மகாமுனிவரான கௌதமர்
அளித்த உபசரிப்பை முறைப் படி ஏற்றுக்கொண்ட பின் ராமன் மிதிலையை நோக்கிப்
பயணப்பட்டான்.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे एकोनपञ्चाशस्सर्गः।।
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான
ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின்
நாற்பத்தொன்பதாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment