ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 56
(வசிஷ்டர் விஸ்வாமித்திரரின் அஸ்திரங்கள் அனைத்தையும் தன்னுடைய
பிரம்ம தண்டத்தால் அழித்து விடுகிறார். விஸ்வாமித்திரர் தானும் ஒரு அந்தணராக வேண்டித்
தவம் மேற்கொள்கிறார்.)
एवमुक्तो वसिष्ठेन विश्वामित्रो महाबल:।
आग्नेयमस्त्रमुत्क्षिप्य तिष्ठ तिष्ठेति चाब्रवीत्।।1.56.1।।
வசிஷ்டர்
இப்படிக்கூறியவுடன் வலிமை மிகுந்த விஸ்வாமித்திரர் ஆக்கினேயாஸ்திரத்தை விடுவித்து,
‘இருங்கள், இருங்கள்!” என்றார்.
ब्रह्मदण्डं
समुत्क्षिप्य कालदण्डमिवाऽपरम्।
वसिष्ठो भगवान् क्रोधादिदं वचनमब्रवीत्।।1.56.2।।
மிகுந்த கோபத்துடன்
வசிஷ்டர் மரணமே ஒரு கோல் வடிவில் இருந்தது போன்ற, பிரம்மதண்டத்தை உயர்த்தி இவ்வாறு
கூறினார்:
क्षत्रबन्धो
स्थितोस्म्येष यद्बलं तद्विदर्शय।
नाशयाम्यद्य ते दर्पं शस्त्रस्य तव गाधिज।।1.56.3।।
“தீய க்ஷத்திரியனே!
காதியின் புதல்வனே! நான் இங்கு தான் நிற்கிறேன். உன்னுடைய வலிமையையும், உனது
அஸ்திரங்களின் பெருமையையும் காட்டு. அவற்றை இப்போதே அழித்து விடுகிறேன்.”
क्व च ते क्षत्रियबलं
क्व च ब्रह्मबलं महत्।
पश्य ब्रह्मबलं दिव्यं मम क्षत्रियपांसन।।1.56.4।।
துச்சமான க்ஷத்திரியனே!
பிரம்மபலத்தின் முன்பு க்ஷத்திரிய பலம் எம்மாத்திரம்? என்னுடைய பிரம்ம பலத்தைப்
பார்!”
तस्यास्त्रं
गाधिपुत्रस्य घोरमाग्नेयमुद्यतम्।
ब्रह्मदण्डेन तच्छान्तमग्नेर्वेग इवाम्भसा।।1.56.5।।
காதியின் மைந்தரான
விஸ்வாமித்திரர் பிரயோகித்த ஆக்கினேயாஸ்திரம், தண்ணீரின் முன் தன் வலிமையை இழந்த
நெருப்பைப் போல், வசிஷ்டரின் பிரம்மதண்டத்தின் முன் தன் வலுவிழந்தது.
वारुणं चैव रौद्रं च
ऐन्द्रं पाशुपतं तथा।
ऐषीकं चापि चिक्षेप कुपितो गाधिनन्दन:।।1.56.6।।
அதனால் சினம் அடைந்த
காதியின் மைந்தர், ஒவ்வொன்றாக, வருணாஸ்திரம், ரௌத்ராஸ்திரம், ஐந்திராஸ்திரம்,
பாசுபதாஸ்திரம் மற்றும், ஐஷிக ஆய்தங்களைப் பிரயோகித்தார்.
मानवं मोहनं चैव
गान्धर्वं स्वापनं तथा।
जृम्भणं मादनं चैव संतापनविलापने।।1.56.7।।
शोषणं दारणं चैव वज्रमस्त्रं सुदुर्जयम्।
ब्रह्मपाशं कालपाशं वारुणं पाशमेव च।।1.56.8।।
पैनाकास्त्रं च दयितं शुष्कार्द्रे अशनी उभे।
दण्डास्त्रमथ पैशाचं क्रौञ्चमस्त्रं तथैव च।।1.56.9।।
धर्मचक्रं कालचक्रं विष्णुचक्रं तथैव च।
वायव्यं मथनं चैव अस्त्रं हयशिरस्तथा।।1.56.10।।
शक्तिद्वयं च चिक्षेप कङ्कालं मुसलं तथा। 560
वैद्याधरं महास्त्रं च कालास्त्रमथ दारुणम्।।1.56.11।।
त्रिशूलमस्त्रं घोरं च कापालमथ कङ्कणम्।
एतान्यस्त्राणि चिक्षेप सर्वाणि रघुनन्दन।।1.56.12।।
वसिष्ठे जपतां श्रेष्ठे तदद्भुतमिवाभवत्।
ரகு நந்தனரே! பின்னர்
விஸ்வாமித்திரர், மானவம், மோகனம், காந்தர்வம், ஸ்வப்னம், ஜ்ரும்பணம், மதனம்,
சந்தாபனம், விலாபனம், ஷோஷணம், தாரணம், வஜ்ரம் ஆகிய அஸ்திரங்களையும், ப்ரம்மம்,
காலம், வருணம் ஆகிய பாசங்களையும், பைனாகம், தைதம், ஷுஷ்க வஜ்ரஸ், ஆர்த்ர வஜ்ரஸ்,
தண்டம், பைசாசம், க்ரௌஞ்சம் ஆகிய ஆயுதங்களையும், தர்மசக்ரம், காலசக்ரம்,
விஷ்ணுசக்ரம், வாயவ்யம், மதனம், ஹயசிரம் ஆகிய ஆயுதங்களையும், கங்காலம், முஸலம்,
சக்தித்வயம், வைத்யாதரம், காலாஸ்த்ரம், த்ரிசூலம் காபாலம், கங்கணம் ஆகிய
அற்புதமான, வலிமை மிக்க அனைத்து ஆயுதங்களையும் பிரயோகித்தார்.
तानि सर्वाणि दण्डेन
ग्रसते ब्रह्मणस्सुत:।।1.56.13।।
तेषु शान्तेषु ब्रह्मास्त्रं क्षिप्तवान् गाधिनन्दन:।
பிரம்மாவின் புதல்வரான
வசிஷ்டர், அந்த அஸ்திரங்கள் அனைத்தையும் தனது தண்டத்தின் மூலம் விழுங்கி விட்டார்.
அந்த அஸ்திரங்களெல்லாம் தோற்றுப்போன பின்னர் விஸ்வாமித்திரர் பிரம்மாஸ்திரத்தைப்
பிரயோகித்தார்.
तदस्त्रमुद्यतं
दृष्ट्वा देवास्साग्निपुरोगमा:।।1.56.14।।
देवर्षयश्च सम्भ्रान्तागन्धर्वास्समहोरगा:।
त्रैलोक्यमासीत्सन्तप्तं ब्रह्मास्त्रे समुदीरिते।।1.56.15।
அக்கினி முதலான தேவர்களும், தெய்வீகமான ரிஷிகளும், நாகர்களும், கந்தர்வர்களும்,
பிரம்மாஸ்திரம் எய்தப்பட்டதைக் கண்டு கலவரம் அடைந்தார்கள். மூன்று உலகங்களும்
துன்பத்தில் ஆழ்ந்தன.
तदप्यस्त्रं महाघोरं
ब्रह्मं ब्राह्मेण तेजसा ।
वसिष्ठो ग्रसते सर्वं ब्रह्मदण्डेन राघव।।1.56.16।।
ராகவரே! அந்த
பிரம்மாஸ்திரத்தையே, பிரம்மாவின் சக்தி படைத்த வசிஷ்டர் தனது பிரம்ம தண்டத்தினால்
முழுமையாக விழுங்கி விட்டார்.
ब्रह्मास्त्रं
ग्रसमानस्य वसिष्ठस्य महात्मन:।
त्रैलोक्यमोहनं रौद्रं रूपमासीत्सुदारुणम्।।1.56.17।।
அந்த பிரம்மாஸ்திரத்தை
விழுங்கும் போது, வசிஷ்டரின் உருவம் மிகுந்த கோபத்துடன், மூன்று உலகங்களும் மயங்கி
விழும் வண்ணம் பயங்கரமாக மாறியது,
रोमकूपेषु सर्वेषु
वसिष्ठस्य महात्मन:।
मरीच्य इव निष्पेतुरग्नेर्धूमाकुलार्चिष:।।1.56.18।।
வசிஷ்டரின்
மயிர்க்கால்களில் இருந்து புகையும், அக்கினிக்கொழுந்துகளும், ஒளிக்கதிர்களும்
வெளிவருவது போல் இருந்தது.
प्राज्वलद्ब्रह्मदण्डश्च
वसिष्ठस्य करोद्यत:।
विधूम इव कालाग्निर्यमदण्ड इवापर:।।1.56.19।।
வசிஷ்டரின் கையில்
இருந்த பிரம்ம தண்டமானது உலகம் அழியும் போது புகையில்லாமல் எரியும் நெருப்பு போல,
இன்னொரு யமதண்டத்தைப் போல எரிந்து கொண்டிருந்தது.
ततोऽस्तुवन् मुनिगणा
वसिष्ठं जपतां वरम्।
अमोघं ते बलं ब्रह्मन् तेजो धारय तेजसा।।1.56.20।।
அதைக் கண்டு,
ரிஷிகணங்கள், தவஸ்ரேஷ்டரான வசிஷ்டரிடத்தில், “பகவானே! தங்களுடைய ஆற்றல்
அழிக்கமுடியாதது. தங்களுடைய சக்தியாலேயே, தங்களுடைய சக்தியைத் தாங்கிக்
கொள்ளுங்கள்.
निगृहीतस्त्वया
ब्रह्मन् विश्वामित्रो महातपा:।
प्रसीद जपतां श्रेष्ठ लोकास्सन्तु गतव्यथा:।।1.56.21।।
பகவானே! மகாதபஸ்வியான
விஸ்வாமித்திரர் தங்களால் அடக்கப் பட்டு விட்டார். தய்வு செய்து, கோபத்தை விட்டு,
இந்த உலகங்களைத் துன்பத்தில் இருந்து காப்பாற்றுங்கள்.”
एवमुक्तो महातेजाश्शमं
चक्रे महातपा:।
विश्वामित्रोऽपि निकृतो विनिश्वस्येदमब्रवीत्।।1.56.22।।
இதைக் கேட்ட மகாதேஜஸ்
உடைய வசிஷ்டர், அமைதி அடைந்தார். தோல்வியால் அவமானப்பட்ட விஸ்வாமித்திரரும் நீண்ட பெருமூச்சு விட்டு இவ்வாறு கூறினார்:
धिग्बलं क्षत्रियबलं
ब्रह्मतेजो बलं बलम्।
एकेन ब्रह्मदण्डेन सर्वास्त्राणि हतानि मे।।1.56.23।।
“வெட்கம்! வெட்கம்! க்ஷத்திரிய
பலம் எதற்காயிற்று? பிரம்ம பலம் தான் உண்மையான பலம். ஒரே ஒரு பிரம்ம தண்டம்
என்னுடைய அனைத்து ஆயுதங்களையும் அழித்து விட்டது.
तदेतत्समवेक्ष्याहं
प्रसन्नेन्द्रियमानस:।
तपो महत्समास्थास्ये यद्वै ब्रह्मत्वकारणम्।।1.56.24।।
இப்போது எனக்கு இதற்கான
காரணம் புரிந்து விட்டது. தெளிந்த மனத்துடனும், அறிவுடனும், பிரம்மத்வத்தை
அடைவதற்காக நான் கடுந்தவம் இயற்றப் போகிறேன்.”
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे षट्पञ्चाशस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான
ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் ஐம்பத்தாறாவது
ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment