ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 57
(திரிசங்கு தன் உடலுடன்
ஸ்வர்க்கம் செல்ல வேண்டி ஒரு யாகம் செய்யத் தீர்மானிக்கிறான். வசிஷ்டர் அதைச்
செய்து வைக்க மறுக்கவே, அவருடைய புதல்வர்களின் உதவியை நாடுகிறான்.)
ततस्सन्तप्तहृदय: स्मरन्निग्रहमात्मन:।
विनिश्श्वस्य विनिश्श्वस्य कृतवैरो महत्मना।।1.57.1।।
स दक्षिणां दिशं गत्वा महिष्या सह राघव ।
तताप परमं घोरं विश्वामित्रो महत्तप:।।1.57.2।।
फलमूलाशनो दान्तश्चकार सुमहत्तप:।
ராகவரே! தமக்கும்
வசிஷ்டருக்கும் இடையில் விரோதம் ஏற்படுத்திக் கொண்டு விட்ட விஸ்வாமித்திரர்,
தனக்கு நேர்ந்த அவமானத்தை நினைத்து மீண்டும் மீண்டும் பெருமூச்செறிந்து, துயரம்
தோய்ந்த மனத்துடன், தனது மூத்த மனைவியுடன் தெற்குப் பகுதிக்குச் சென்று,
பழங்களையும், கிழங்குகளையும் மட்டும் உண்டு, தன் புலன் களை அடக்கி மிகவும்
கடுமையான தவம் செய்யலானார்.
अथास्य जज्ञिरे
पुत्रास्सत्यधर्मपरायणा:।
हविष्यन्दो मधुष्यन्दो दृढनेत्रो महारथ:।।1.57.3।।
சில காலம் சென்ற பின்
அவருக்கு, ஹவிஷ்யந்தன், மதுஷ்யந்தன், த்ருட நேத்ரன், மஹாரதன் என்ற புதல்வர்கள்
பிறந்தார்கள்.
पूर्णे वर्षसहस्रे तु
ब्रह्मा लोकपितामह:।
अब्रवीन्मधुरं वाक्यं विश्वामित्रं तपोधनम्।।1.57.4।।
ஆயிரம் ஆண்டுகள் ஆன
பிறகு பிதாமகரான பிரம்மதேவர், தவச்செல்வரான விஸ்வாமித்திரருக்குக் காட்சி கொடுத்து,
இனிய வார்த்தைகளில் இவ்வாறு கூறினார்:
चिता राजर्षिलोकास्ते
तपसा कुशिकात्मज।
अनेन तपसा त्वां तु राजर्षिरिति विद्महे।।1.57.5।।
“குசிகவம்சத்தில் பிறந்தவரே! உங்களுடைய தவத்தால் நீங்கள்
ராஜரிஷிகளின் உலகங்களை வென்று விட்டீர்கள். இனி நீங்களும் ஒரு ராஜரிஷியாக
அறியப்படுவீர்கள்!”
एवमुक्त्वा महातेजा
जगाम सह दैवतै:।
त्रिविष्टपं ब्रह्मलोकं लोकानां परमेश्वर:।।1.57.6।।
இவ்வாறு கூறி விட்டு,
மகா தேஜஸ் உடைய பிரம்மதேவர், பிற தேவர்களுடன், தனது இருப்பிடமாகிய பிரம்மலோகத்தை
அடைந்தார்.
विश्वामित्रोऽपि
तच्छ्रुत्वा ह्रिया किञ्चिदवाङ्मुख:।
दु:खेन महताऽऽविष्टस्समन्युरिदमब्रवीत् ।।1.57.7।।
அதைக் கேட்ட
விஸ்வாமித்திரர் வெட்கத்தில் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு, கோபத்துடனும்,
வருத்தத்துடனும் கூறினார்:
तपश्च सुमहत्तप्तं
राजर्षिरिति मां विदु:।
देवास्सर्षिगणास्सर्वे नास्ति मन्ये तप:फलम्।।1.57.8।।
“நான் இவ்வளவு
கடுமையாகத் தவம் புரிந்தும், தேவர்களும், ரிஷிகளும் என்னை ராஜரிஷியென்று தான்
ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய தவம் பலனளிக்கவில்லை என்று தான்
நினைக்கிறேன்.”
इति निश्चित्य मनसा भूय
एव महातपा:।
तपश्चकार काकुत्स्थ परमं परमात्मवान्।।1.57.9।।
காகுஸ்தரே! மகா
தபஸ்வியான விஸ்வாமித்திரர் இவ்வாறு மனதில் தீர்மானித்து, மீண்டும், இன்னும்
கடுமையான தவத்தைத் தொடங்கினார்.
एतस्मिन्नेव काले तु
सत्यवादी जितेन्द्रिय:।
त्रिशङ्कुरिति विख्यात इक्ष्वाकुकुलवर्धन:।।1.57.10।।
அந்தக்காலத்தில்,
சத்யவாதியும், புலன்களை வென்றவனுமான அரசன் ஒருவன், இக்ஷ்வாகு குலத்தில் பிறந்து,
திரிசங்கு என்ற பெயருடன் இருந்தான்.
तस्य बुद्धिस्समुत्पन्ना
यजेयमिति राघव ।
गच्छेयं स्वशरीरेण देवानां परमां गतिम्।।1.57.11।।
ராகவரே! ஒரு சமயம்,
அவனுடைய மனத்தில், இந்தப் பூதவுடலுடனேயே தேவலோகத்துக்குப் போவதற்கு வேண்டி ஒரு
யாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
स वसिष्ठं समाहूय
कथयामास चिन्तितम्।
अशक्यमिति चाप्युक्तो वसिष्ठेन महात्मना।।1.57.12।।
வசிஷ்டரை வரவழைத்துத்
தனது எண்ணத்தை திரிசங்கு மன்னன் வெளிப்படுத்திய போது, அது சாத்தியமில்லை என்று
மகாத்மா வசிஷ்டர் மறுத்து விட்டார்.
प्रत्याख्यातो वसिष्ठेन
स ययौदक्षिणां दिशम्।
ततस्तत्कर्मसिद्ध्यर्थं पुत्रां स्तस्य गतो नृप:।।1.57.13।।
வசிஷ்டர் மறுத்ததும்,
திரிசங்கு மன்னன், வசிஷ்டரின் புதல்வர்களை நாடித் தென் திசை நோக்கிச் சென்றார்.
वासिष्ठा दीर्घतपसस्तपो
यत्र हि तेपिरे।
त्रिशंङ्कुस्सुमहातेजा श्शतं परमभास्वरम्।।1.57.14।।
वसिष्ठपुत्रान् ददृशे तप्यमानान् यशस्विन:।
மகாதேஜஸ் உடைய
திரிசங்கு, அங்கே, நீண்ட தவத்தால் தேஜஸ்ஸுடன்
திகழும் வசிஷ்டருடைய நூறு புதல்வர்களைப் பார்த்து, அவர்களிடம் சென்றார்.
सोऽभिगम्य
महात्मनस्सर्वानेव गुरोस्सुतान्।।1.57.15।।
अभिवाद्यानुपूर्व्येण ह्रिया किञ्चिदवाङ्मुख:।
अब्रवीत्सुमहाभगान्सर्वानेव कृताञ्जलि:।।1.57.16।।
திரிசங்கு மன்னர் குரு
வசிஷ்டரின் புதல்வர்களைக் கண்டு அவர்களின் வயதுக்கேற்ப முறையே நமஸ்கரித்தார். தலை
குனிந்து, பணிவுடன் வணங்கிக், கைகளைக் கூப்பிக்கொண்டு, அவர்களிடம் இவ்வாறு
கூறினார்:
शरणं व: प्रपद्येऽहं शरण्यान्
शरणागत:।
प्रत्याख्यातोऽस्मि भद्रं वो वसिष्ठेन महात्मना।।1.57.17।।
தங்களைச்
சரணடைத்தவர்களைப் பாதுகாப்பவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்! உங்கள் அனைவருக்கும் நன்மை
உண்டாகட்டும்! மகாத்மா வசிஷ்டர் என்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற மறுத்து விட்டார்.
यष्टुकामो महायज्ञं
तदनुज्ञातुमर्हथ।
गुरुपुत्रानहं सर्वान्नमस्कृत्य प्रसादये।।1.57.18।।
ஒரு மகா யக்ஞம்
செய்வதற்கு விரும்புகிறேன். அதற்கு, குருவின் புதல்வர்களாகிய நீங்கள் அனைவரும் சம்மதிக்க வேண்டும். உங்களை
நமஸ்கரித்து வேண்டிக்கொள்கிறேன்.
शिरसा प्रणतो याचे ब्राह्मणान्
तपसि स्थितान्।
ते मां भवन्तस्सिद्ध्यर्थं याजयन्तु समाहिता:।।1.57.19।।
सशरीरो यथाऽहं हि देवलोकमवाप्नुयाम्।
அந்தணர்களாகிய நீங்கள்
தவத்தில் நிலைபெற்று விளங்குகிறீர்கள். இந்த சரீரத்துடனேயே நான் தேவலோகம் செல்லும்
வகையில் ஒரு யக்ஞத்தை நடத்திக்கொடுக்குமாறு, தங்களை வணங்கி, வேண்டிக் கேட்டுக்
கொள்கிறேன்.
प्रत्याख्यातो वसिष्ठेन
गतिमन्यां तपोधना:।।1.57.20।।
गुरुपुत्रानृते सर्वान्नाहं पश्यामि काञ्चन।
தவச்செல்வர்களே! குரு
வசிஷ்டரால் மறுக்கப்பட்ட பின், குருவின் புதல்வர்களாகிய தங்களைத் தவிர வேறு
யாராலும், என்னுடைய குறிக்கோளை நிறைவேற்றி வைக்க முடியாது.
इक्ष्वाकूणां हि
सर्वेषां पुरोधा: परमा गति:।।1.57.21।।
पुरोधसस्तु विद्वांसस्तारयन्ति सदा नृपान्।
तस्मादनन्तरं सर्वे भवन्तो दैवतं मम।।1.57.22।।
இக்ஷ்வாகு குலத்தில்
பிறந்தவர்களுக்கெல்லாம், ஆன்மீக குரு தான் வழி காட்டி. கற்றறிந்த குருமார்கள்
எத்தனையோ முறை அரசர்களுக்கு மோக்ஷம் கிடைக்க உதவியிருக்கிறார்கள். வசிஷ்டருக்குப்
பின் நீங்கள் அனைவரும் தான் எனக்கு தெய்வங்கள்.”
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे सप्तपञ्चाशस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான
ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் ஐம்பத்தேழாவது
ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment