Monday, 19 February 2024

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

அயோத்தியா காண்டம்

ஸர்க்கம் – 2

( தசரதர் அமைச்சர்களும் பெரியோர்களும் இருக்கும் அவையில் ராமரைப் பட்டத்து இளவரசராக்கும் எண்ணத்தை வெளியிடுகிறார். அவை மிக்க மகிழ்ச்சியுடன் அதற்கு ஒப்புதல் கொடுப்பதுடன், ராமருடைய நற்குணங்களை விவரித்துத் தங்கள் கருத்தை உறுதி செய்கிறது. )

 
ततः परिषदं सर्वामामन्त्र्य वसुधाधिपः।
हितमुद्धर्षणं चैवमुवाच प्रथितं वचः।।2.2.1।।

பின்னர், தசரத மன்னர், அவையில் இருந்த அனைத்து அரசர்களையும், பிற மக்களையும் பார்த்து, அவர்களுக்கு நன்மை செய்யக்கூடியவையும், மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடியவையும், இனிமையானவையுமான  சொற்களைக்கூறினார்:

 

दुन्दुभिस्वनकल्पेन गम्भीरेणानुनादिना।
स्वरेण महता राजा जीमूत इव नादयन्।।2.2.2।।

राजलक्षणयुक्तेन कान्तेनानुपमेन च।
उवाच रसयुक्तेन स्वरेण नृपतिर्नृपान्।।2.2.3।।
 



தசரத மன்னர், அங்கே கூடியிருந்த மன்னர்களிடத்தில், இடியைப் போன்றதும், துந்துபியைப் போன்றதுமான கம்பீரமான குரலில், ஒப்பற்ற, இனிமையான சொற்களைக் கூறினார்.


विदितं भवतामेतद्यथा मे राज्यमुत्तमम्।
पूर्वकैर्मम राजेन्द्रैस्सुतवत्परिपालितम्।।2.2.4।।

இந்த உன்னதமான தேசத்தை, என்னுடைய முன்னோர்களாகிய சிறந்த அரசர்கள், தங்கள் பிரஜைகளைத் தங்கள் குழந்தைகளைப் போன்ற அன்புடன் பார்த்துக்கொண்டு மிகச் சிறப்பான முறையில்,ஆட்சி புரிந்து வந்தார்கள் என்பதைத் தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.

 

सोऽहमिक्ष्वाकुभि स्सर्वैर्नरेन्द्रैः परिपालितम्।
श्रेयसा योक्तुकामोऽस्मि सुखार्हमखिलं जगत्।।2.2.5।।

இக்ஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த நானும், அந்த அனைத்து மன்னர்களைப் போலவே, இந்த உலகம் முழுவதற்கும், நன்மை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.

 

मयाप्याचरितं पूर्वैः पन्थानमनुगच्छता।
प्रजा नित्यमनिद्रेण यथाशक्त्यभिरक्षिताः।।2.2.6।।
 

என்னுடைய முன்னோர்களின் வழியில் சென்று, நானும், என்னுடைய மக்களை, மிகவும் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும், என்னால் முடிந்த அளவில் பாதுகாத்து வந்திருக்கிறேன்.

 

इदं शरीरं कृत्स्नस्य लोकस्य चरता हितम्।
पाण्डुरस्याऽतपत्रस्यच्छायायां जरितं मया।।2.2.7।।

இந்த வெண்கொற்றக்குடையின் கீழ் உலகை ஆண்டு கொண்டு, மக்களின் பாதுகாப்பையும், மகிழ்ச்சியையும் உறுதிப் படுத்துவதில் எனக்கு முதுமை வந்து விட்டது.

 

प्राप्य वर्षसहस्राणि बहून्यायूंषि जीवतः।
जीर्णस्यास्य शरीरस्य विश्रान्तिमभिरोचये।।2.2.8।।

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து விட்ட எனது உடல் இப்போது தளர்ந்து விட்டது ஆகவே, நான் ஓய்வு எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்.

 

राजप्रभावजुष्टां हि दुर्वहामजितेन्द्रियैः।
परिश्रान्तोऽस्मि लोकस्य गुर्वीं धर्मधुरं वहन्।।2.2.9।।

இந்தப் பொறுப்பை, வலிமை, தைரியம் போன்ற அரசருக்குரிய குணங்கள் உரியவர் தான் நிறைவேற்ற முடியும். தன் இந்திரியங்களைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் அச் செயலைச் செய்ய முடியாது. கடமையின் பாரத்தைச் சுமந்து கொண்டு, தர்மத்தை நிலை நாட்டும் செயலைத் தொடர்ந்து செய்து, நான் களைத்து விட்டேன்.

 

सोऽहं विश्रममिच्छामि पुत्रं कृत्वा प्रजाहिते।
सन्निकृष्टानिमान्सर्वाननुमान्य द्विजर्षभान्।।2.2.10।।

ஆகவே, இங்கு குழுமியுள்ள, மிகச் சிறந்த அந்தணர்களின் சம்மதத்துட்ன, எனது மகனை, மக்களைப் பாதுகாப்பதற்காக நியமித்து விட்டு, நான் ஓய்வு எடுக்க விரும்புகிறேன்.

 

अनुजातो हि मां सर्वैर्गुणैर्ज्येष्ठो ममात्मजः।
पुरन्दरसमो वीर्ये रामः परपुरञ्जयः।।2.2.11।।

என் குணங்களை அப்படியே கொண்டு பிறந்திருக்கும்

என்னுடைய மூத்த மகனான ராமன், எதிரிகளின் நகரை அழிக்கக்கூடியவன். இந்திரனுக்கு நிகரான வீரம் உடையவன்.

 

तं चन्द्रमिव पुष्येण युक्तं धर्मभृतां वरम्।
यौवराज्ये नियोक्ताऽस्मि प्रीतः पुरुषपुङ्गवम्।।2.2.12।।

தர்மத்தைக் காப்பாற்றுவோரில் தலை சிறந்தவனும், மனிதர்களுக்குள் உத்தமமானவனும், பூச நக்ஷத்திரத்தில் வரும்  முழுமதியைப் போல் பிரகாசமானவனும் ஆன என் மகன் ராமனைப் பட்டத்து இளவரசனாக அறிவிக்கிறேன்.

 

अनुरूपस्स वै नाथो लक्ष्मीवान् लक्ष्मणाग्रजः।
त्रैलोक्यमपि नाथेन येन स्यान्नाथवत्तरम्।।2.2.13।।

ராமனை அரசனாக அடைந்த இந்த மூன்று உலகங்களுக்கும், மிக நல்ல பாதுகாவலர் கிடைப்பார். லக்ஷ்மணனின் மூத்தோனாகிய ராமன் இந்த நாட்டை ஆள்வதற்கு, மிகவும் பொருத்தமானவன்.

 

अनेन श्रेयसा सद्यस्संयोज्यैवमिमां महीम्।
गतक्लेशो भविष्यामि सुते तस्मिन्निवेश्य वै।।2.2.14।।

இனி, தாமதம் செய்யாமல், என்னுடைய அரசை என் புதல்வன் ராமனிடம் ஒப்படைத்து விட்டு, இந்த உலகம்  தொடர்ந்து நலம் பெற்று விளங்குவதை உறுதிப் படுத்திக்கொண்ட பின், என் கவலையெல்லாம் தீர்ந்து நிம்மதியாக இருக்கப் போகிறேன்.

 

यदिदं मेऽनुरूपार्थं मया साधु सुमन्त्रितम्।
भवन्तो मेऽनुमन्यन्तां कथं वा करवाण्यहम्।।2.2.15।।

இந்தத் தீர்மானம் எனக்கு ஏற்பு உடையதாயினும், நன்கு கலந்தாலோசித்த பிறகே, இந்தத் தீர்மானம் செய்யப்பட்டிருந்தாலும், நீங்கள் எல்லாரும் இதற்குச் சம்மதம் அளித்து, நான் எவ்வாறு இதை நிறைவேற்ற வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டும்.

 

यद्यप्येषा मम प्रीतिर्हितमन्यद्विचिन्त्यताम्।
अन्या मध्यस्थचिन्ता हि विमर्दाभ्यधिकोदया।।2.2.16।।

நான் செய்ய விரும்புவது இது தான் என்ற போதிலும், இந்த நாட்டிற்கு நன்மை அளிக்கக் கூடிய வேறு ஏதாவது உபாயம் இருந்தால், அதையும் சொல்லுங்கள். எந்த வித பாரபட்சமும் இல்லாமல் செய்யும் ஆலோசனை எப்பொழுதும் நன்மை பயக்கும்.”

 

इति ब्रुवन्तं मुदिताः प्रत्यनन्दन्नृपा नृपम्।
वृष्टिमन्तं महामेघं नर्दन्त इव बर्हिणः।।2.2.17।।

இவ்வாறு தசரத மன்னர் கூறி முடித்ததும், மிகுந்த மகிழ்ச்சியுடன் அங்கு கூடியிருந்த அரசர்கள் யாவரும், மழை மேகத்தைக் கண்ட மயில்களைப் போல், மகிழ்ச்சி ஒலி எழுப்பினர்.

 

स्निग्धोऽनुनादी संजज्ञे तत्र हर्षसमीरितः।
जनौघोद्घुष्टसन्नादो विमानं कम्पयन्निव।।2.2.18।।

(அவர் சொன்னதை ஆமோதித்து) அங்கு கூடியிருந்தவர்கள் அன்புடனும், பெருமகிழ்ச்சியுடனும், எழுப்பிய ஒலி எதிரொலித்ததில், அந்த அரண்மனையே நடுங்கியது.

 

तस्य धर्मार्थविदुषो भावमाज्ञाय सर्वशः।
ब्राह्मणा जनमुख्याश्च पौरजानपदै स्सह।।2.2.19।।

समेत्य मन्त्रयित्वा तु समतागतबुद्धयः।
ऊचुश्च मनसा ज्ञात्वा वृद्धं दशरथं नृपम्।।2.2.20।।

அறம், பொருள் ஆகியவை பற்றி நன்கு அறிந்த தசரத மன்னரின் கருத்துக்களை நல்ல படி ஆராய்ந்த அந்தணர்களும், நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள முக்கியமானவர்களும், ஒரு மனதாக ஒரு முடிவுக்கு வந்து,  வயது முதிர்ந்த தசரத மன்னரிடம் இவ்வாறு கூறினர்.

 

अनेकवर्षसाहस्रो वृद्धस्त्वमसि पार्थिव।
स रामं युवराजानमभिषिञ्चिस्व पार्थिवम्।।2.2.21।।

“அரசே! பல்லாயிரக்கணக்கான வருடங்கள் வாழ்ந்து, தங்களுக்கு வயதாகியிருக்கிறது. ஆகவே, தாங்கள் ராமருக்குப் பட்டத்து இளவரசராகப் பட்டம் சூட்ட வேண்டும்.

 

इच्छामो हि महाबाहुं रघुवीरं महाबलम्।
गजेन महताऽयान्तं रामं छत्रावृताननम्।।2.2.22।।

வலிமை பொருந்திய தோள்களை உடைய ராமர் கம்பீரமான யானை மீதமர்ந்து, வெண்கொற்றக்குடை அவர் முகத்தை சற்றே மறைக்க, வலம் வரும் காட்சியைக் காண ஆவலாக இருக்கிறோம்.“

 

इति तद्वचनं श्रुत्वा राजा तेषां मनःप्रियं।
अजानन्निव जिज्ञासुरिदं वचनमब्रवीत्।।2.2.23।।

அவர்கள் கூறிய இந்த சொற்களைக் கேட்ட தசரதர், அவர்களுடைய விருப்பத்தை அறியாதவர் போல இவ்வாறு கூறினார்:

 

श्रुत्वैव वचनं यन्मे राघवं पतिमिच्छथ।
राजान स्संशयोऽयं मे किमिदं ब्रूत तत्त्वतः।।2.2.24।।

“அரசர்களே! என் வார்த்தைகளைக் கேட்டவுடனேயே நீங்கள் அனைவரும் ராமன் அரசனாக வேண்டும் என்னும் உங்கள் விருப்பத்தைத் தெரிவித்தீர்கள். ஆயினும், நீங்கள் உங்கள் மனதார அவ்வாறு கூறினீர்களா என்று சொல்லுங்கள்.

 

कथं नु मयि धर्मेण पृथिवीमनुशासति।
भवन्तो द्रष्टुमिच्छन्ति युवराजं ममात्मजम्।।2.2.25।।

நான் தர்மத்தின் வழியில் ஆட்சி செய்து வரும் போது, நீங்கள் என் மகனைப் பட்டத்து இளவரசனாகப் பார்க்க விரும்பும் காரணம் யாது?

ते तमूचुर्महात्मानं पौरजानपदैस्सह।
बहवो नृप कल्याणा गुणाः पुत्रस्य सन्ति ते।।2.2.26।।

நகர மக்களுடனும், கிராம மக்களுடனும் சேர்ந்து கொண்டு, அந்த அரசர்கள் கூறினார்கள்: “அரசே! தங்கள் புதல்வனிடத்தில் ஏராளமான கல்யாண குணங்கள் உள்ளன.

 

गुणान् गुणवतो देव देवकल्पस्य धीमतः।
प्रियानानन्दनान्कृत्स्नान्प्रवक्ष्यामोऽद्य तान् शृणु।।2.2.27।।

அரசே! ராமனிடத்தில், தேவர்களுக்கு இணையான, அறிவாற்றல் பொருந்திய, அன்புக்குரிய, மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய பண்புகள் என்னென்ன இருக்கின்றன என்று சொல்கிறோம், கேளுங்கள்!

 

दिव्यैर्गुणैश्शक्रसमो रामस्सत्यपराक्रमः।
इक्ष्वाकुभ्योऽपि सर्वेभ्यो ह्यतिरिक्तो विशांपते।।2.2.28।।

அரசே! ராமர் தெய்வீகமான குணங்களில் இந்திரனுக்குச் சமமானவர். சத்ய பராக்கிரமர். இக்ஷ்வாகு வம்சத்தினருக்குள்ளேயே, அவர் தனிச்சிறப்பு வாய்ந்தவர்.

 

राम स्सत्पुरुषो लोके सत्यधर्मपरायणः।
साक्षाद्रामाद्विनिर्वृत्तो धर्मश्चापि श्रिया सह।।2.2.29।।

சத்தியத்திலும், தர்மத்திலும் பெரும் ஈடுபாடு உடைய ராமர் மக்களுக்குள்ளே மிகுந்த மரியாதைக்குரியவர். அறமும், செல்வமும், அவரிடம் இருந்து தான் வெளிவருகிறது.

 

प्रजासुखत्त्वे चन्द्रस्य वसुधायाः क्षमागुणैः।
बुद्ध्या बृहस्पतेस्तुल्यो वीर्ये साक्षाच्छचीपतेः।।2.2.30।।

மக்களுக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்துவதில் சந்திரனைப் போன்றவர். பொறுமையில், பூமியை நிகர்த்தவர். அறிவாற்றலிலோ, ப்ருஹஸ்பதிக்கு நிகரானவர். வீரத்தில், இந்திரனுக்கு இணையானவர்.

 

धर्मज्ञः सत्यसन्धश्च शीलवाननसूयकः।
क्षान्तः सान्त्वयिता श्लक्ष्णः कृतज्ञो विजितेन्द्रियः।।2.2.31।।
 

ராமர் தர்மத்தை நன்கு அறிந்தவர். தனது வாக்குத் தவறாதவர். பொறாமையற்றவர். சகிப்புத்தன்மையும், மென்மையும், நன்றியுணர்வும் கூடியவர். தன் இந்திரியங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்.

 

मृदुश्च स्थिरचित्तश्च सदा भव्योऽनसूयकः।
प्रियवादी च भूतानां सत्यवादी च राघवः।।2.2.32।।

बहुश्रुतानां वृद्धानां ब्राह्मणानामुपासिता।
तेनास्येहाऽतुला कीर्तिर्यशस्तेजश्च वर्धते।।2.2.33।।

ரகு குலத்தில் பிறந்த ராமர் மென்மையாகப்பேசக்கூடியவர். நிலையான குணங்களுடனும், அமைதியுடனும், பொறாமையின்றியும் இருப்பவர். அனைவரிடத்திலும், மகிழ்ச்சியுடன் பழகுபவர். வயது முதிர்ந்த, கல்வியறிவு நிறைந்த அந்தணர்களுக்கு சேவை செய்பவர். இந்த நற்பண்புகளால், அவருடைய புகழும், பெருமையும், நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றன.

 

देवासुरमनुष्याणां सर्वास्त्रेषु विशारदः।
सम्यग्विद्याव्रतस्नातो यथावत्साङ्गवेदवित्।।2.2.34।।

தேவர்களுக்குள்ளும், அசுரர்களுக்குள்ளும், மனிதர்களுக்குள்ளும், ஆயுதங்களைப் பயன்படுத்துவதில், மிகச் சிறந்த நிபுணர். அனைத்து விதமான கல்விகளையும், முறைப்படி பெற்று, வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் நன்கு அறிந்தவர்.

गान्धर्वे च भुवि श्रेष्ठो बभूव भरताग्रजः।
कल्याणाभिजन स्साधुरदीनात्मा महामतिः।।2.2.35।।

பரதனின் தமையனான ராமர் சங்கீதத்திலும், இந்த உலகிலேயே மிகவும் திறமை சாலியாக இருக்கிறார். நல்ல குடியில் பிறந்தவராகவும், பக்தியும், அறிவாற்றலும், பெருந்தன்மையும், உடையவராகவும் இருக்கிறார்.

 

द्विजैरभिविनीतश्च श्रेष्ठैर्धर्मार्थनैपुणैः।
यदा व्रजति सङ्ग्रामं ग्रामार्थे नगरस्य वा।।2.2.36।।

गत्वा सौमित्रिसहितो नाऽविजित्य निवर्तते।

அறம், பொருள் ஆகியவை பற்றி நன்றாக அறிந்த அந்தணர்களிடம் பயிற்சி எடுத்துள்ள ராமர், தன் சகோதரன் லக்ஷ்மணனுடன், ஒரு கிராமத்திற்காகவோ அல்லது நகரத்திற்காகவோ, போரிட நேர்ந்தால், எதிரியை வெற்றி கொள்ளாமல் வரவே மாட்டார்.

 

सङ्ग्रामात्पुनरागम्य कुञ्जरेण रथेन वा।2.2.37।।

पौरान् स्वजनवन्नित्यं कुशलं परिपृच्छति।।
पुत्रेष्वग्निषु दारेषु प्रेष्यशिष्यगणेषु च।2.2.38।।

निखिलेनानुपूर्व्याच्च पितापुत्रानिवौरसान्।।

 

அவ்வாறு போரிட்டுத் திரும்பி வரும் பொழுது, யானை மீது வந்தாலும், தேரின் மீது வந்தாலும், தனது தேசத்து மக்களின் நலனை, முறைப்படி, தனது குடும்பத்தினருடைய மற்றும் உறவினருடைய நலனை விசாரிப்பது போலவே விசாரிப்பார். மேலும், அவர்களுடைய குழந்தைகளைப் பற்றியும், அவர்களுடைய ஆன்மீகச் சடங்குகளைப்பற்றியும், அவர்களுடைய மனைவி, சேவகர்கள் மற்றும் சீடர்களைப் பற்றியும், ஒரு தந்தை தன் மகனிடம் விசாரிப்பது போல் விசாரிப்பார்.

 

शुश्रूषन्ते च व श्शिष्याः कच्चित्कर्मसु दंशिताः।।2.2.39।।

इति नः पुरुषव्याघ्र स्सदा रामोऽभिभाषते।

மனிதருள் புலி போன்ற ராமர், அவர்களுடைய சீடர்கள் சரியாகத் தமது கடமைகளைச் செய்கிறார்களா என்றும் கேட்டறிவார்.

 

व्यसनेषु मनुष्याणां भृशं भवति दुःखितः।।2.2.40।।

उत्सवेषु च सर्वेषु पितेव परितुष्यति।

மக்களுக்கு ஏதாவது துன்பம் நேரிட்டால், மிகவும் வருந்தியும், மகிழ்ச்சியான கொண்டாட்டங்களின் போது மிகவும் மகிழ்ந்தும், ஒரு தந்தையைப் போலவே நடந்து கொள்வார்.

 

सत्यवादी महेष्वासो वृद्धसेवी जितेन्द्रियः।।2.2.41।।

स्मितपूर्वाभिभाषी च धर्मं सर्वात्मना श्रितः।

எப்பொழுதும் உண்மையே பேசுபவர். மிகச்சிறந்த வில் வீரர். வயதானவர்களுக்குச் சேவை செய்பவர். தனது புலன் களை அடக்கியவர். எப்போதும் புன் சிரிப்புடனேயே பேசுபவர். முழு மனத்துடன் தர்மத்தின் வழி செல்பவர்.

 

सम्यग्योक्ता श्रेयसां च न विगृह्य कथारुचिः।।2.2.42।।

उत्तरोत्तरयुक्तौ च वक्ता वाचस्पतिर्यथा।

தன்னைச் சரணடைந்தவர்களுக்கு  நிச்சயம் உதவி செய்பவர். கருத்து வேறுபாடு ஏற்படுத்தக்கூடிய உரையாடல்களில் விருப்பம் இல்லாதவர். விவாதங்கள் நடந்தால் அறிவின் பாற்பட்டு, ப்ருஹஸ்பதியைப் போலத் திறமையாகப் பேசக்கூடியவர்.

 

सुभ्रूः आयतताम्राक्षः साक्षाद्विष्णुरिव स्वयम्।।2.2.43।।

रामो लोकाभिरामोऽयं शौर्यवीर्यपराक्रमैः।
 

மக்களுக்கு ஆனந்தத்தை அளிக்கக்கூடிய ராமர் அழகிய புருவங்களும், தாமிரத்தின் நிறத்தில் அமைந்திருக்கும் கண்களையும் உடையவர். வீரத்திலும், தைரியத்திலும், விஷ்ணுவைப் போன்றவர்.

 

प्रजापालनतत्त्वज्ञो न रागोपहतेन्द्रियः।।2.2.44।।

शक्तस्त्रैलोक्यमप्येको भोक्तुं किन्नु महीमिमाम्।

மக்களை ஆள்வதில் மிகுந்த திறமை உடையவர். உணர்ச்சி வசப்பட்டு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாதவர். இந்த மூவுலகையும் ஆள்வதற்கு அவரால் முடியும் என்றால் இந்த பூமியைப் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது?

 

नास्य क्रोधः प्रसादश्च निरर्थोऽस्ति कदाचन।।2.2.45।।

हन्त्येव नियमाद्वध्यानवध्ये न च कुप्यति।


अस्य his, कोप: anger, प्रसादश्च favour also, कदाचन ever, निरर्थ(क): in vain, नास्ति is not, नियमात् in accordance with justice, वध्यान् those who deserve to be killed, हन्ति एव is punishable, अवध्ये those who should not be killed, न कुप्यति does not get angry.


His anger or favour never goes in vain. He kills those who rightly deserve to be killed and flares not at those whose life is to be spared.

அவர் காரணமில்லாமல் ஒருவர் மேல் கோபப்படவோ,  அல்லது அவருக்குத் துணை நிற்கவோ மாட்டார். கொல்லப்பட வேண்டியவர்களை நிச்சயம் கொல்வார். பாதுகாக்கப் படவேண்டியவர்கள் மீது ஒரு போதும் கோபப்படமாட்டார்.

 

युनक्त्यर्थैः प्रहृष्टश्च तमसौ यत्र तुष्यति।।2.2.46।।

शान्तै स्सर्वप्रजाकान्तैः प्रीतिसञ्जननैर्नृणाम्।
गुणैर्विरुरुचे रामो दीप्त स्सूर्य इवांशुभिः।।2.2.47।।

ஒருவர் மீது மகிழ்ச்சி கொண்டால் அவருக்கு ஏராளமான செல்வத்தை வழங்குவார். எல்லாருக்கும் பிரியமானவர். நல்லவரிடத்தில், விசேஷமாக அன்பு செலுத்துபவர். தன் கிரணங்களால் பிரகாசிக்கும் சூரியனைப் போலத் தனது நற்குணங்களால் ஒளிர்பவர், ராமர்.

 

तमेवंगुणसम्पन्नं रामं सत्यपराक्रमम्।
लोकपालोपमं नाथमकामयत मेदिनी।।2.2.48।।

இத்தகைய அற்புதமான குணங்களுடன் கூடியவரும், சத்யபராக்கிரமரும், உலகைக் காப்பதில் இந்திரனைப் போன்றவரும் ஆன ராமரைத் தனது தலவனாக அடையவேண்டும் என்று இந்தப் பூமாதேவி விரும்புகிறாள்.

 

वत्सश्श्रेयसि जातस्ते दिष्ट्याऽसौ तव राघव।
दिष्ट्या पुत्रगुणैर्युक्तो मारीच इव काश्यपः।।2.2.49।।

ரகு வம்சத்தில் பிறந்தவரே! தங்களுடைய பாக்கியத்தினால், மரீசருக்குக் காஸ்யபர் புதல்வனாகப் பிறந்ததைப் போல, புதல்வர்களுக்குண்டான அனைத்து நற்பண்புகளும் கொண்ட ராமர் தங்களுக்கு புதல்வனாகப் பிறந்திருக்கிறார்.

 

बलमारोग्यमायुश्च रामस्य विदितात्मनः।
देवासुरमनुष्येषु सगन्धर्वोरगेषु च।।2.2.50।।

आशंसते जनस्सर्वो राष्ट्रे पुरवरे तथा।

आभ्यन्तरश्च बाह्यश्च पौरजानपदो जनः।।2.2.51।।
 

கந்தர்வர்களும், உரகர்களும், தேவர்களும், அசுரர்களும், நகரங்களிலும், கிராமங்களிலும் வசிக்கும் மக்களும், அருகில் உள்ள பகுதிகளில் வசிப்பவரும், தொலைவில் உள்ள பகுதிகளில் வசிப்பவரும், புகழ் மிக்க ராமருக்கு, நல்ல வலிமையும், ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

 

स्त्रियो वृद्धास्तरुण्यश्च सायं प्रातस्समाहिताः।
सर्वान् देवान् नमस्यन्ति रामस्यार्थे यशस्विनः।।2.2.52।।

இள வயதுப் பெண்களும், வயது முதிர்ந்த பெண்களும், காலையிலும், மாலையிலும், இறைவனை வணங்கி, ராமருக்காக வேண்டிக்கொள்கிறார்கள்.

 

तेषामायाचितं देव त्वत्प्रसादात्समृद्ध्यताम्।

राममिन्दीवरश्यामं सर्वशत्रुनिबर्हणम्।।2.2.53।।

पश्यामो यौवराज्यस्थं तव राजोत्तमात्मजम्।

அரசே! மக்களின் வேண்டுதல் தங்கள் அருளால் நிறைவேறட்டும்! நீலத்தாமரையைப் போன்ற முக அழகு கொண்ட வரும், எதிரிகளை அழிப்பவரும், தங்களுடைய புதல்வருமாகிய ராமரைப் பட்டத்து இளவரசராக நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.

 

तं देव देवोपममात्मजं ते  सर्वस्य लोकस्य हिते निविष्टम्।
हिताय नः क्षिप्रमुदारजुष्टं मुदाऽभषेक्तुं वरद त्वमर्हसि।।2.2.54।।

கேட்பவருக்கு வரங்களைத் தருபவரே! அனைத்து நற்பண்புகளும் நிறைந்தவரும், தேவதேவருக்கு இணையானவரும், எங்களுக்கு நன்மை செய்வதில் உறுதியுடன் இருப்பவருமான ராமரை, இந்த உலகத்தின் நன்மைக்காகத், தாமதிக்காமல், மிகுந்த மகிழ்ச்சியுடன் பட்டத்து இளவரசராக நியமியுங்கள்!”


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये अयोध्याकाण्डे द्वितीयस्सर्गः।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், அயோத்தியா காண்டத்தின்  இரண்டாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

16.02.2024

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...