ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 74
(விஸ்வாமித்திரர்
இமயமலைக்குப் புறப்படுகிறார். ஜனக மன்னர் தன் புதல்விகளுக்குப் பரிசுகளை
வழங்குகிறார். தசரதர் தனது நாட்டிற்குத் திரும்பும் வழியில் பரசுராமர்
எதிர்ப்படுகிறார்.)
अथ रात्र्यां व्यतीतायां विश्वामित्रो महामुनिः।
आपृष्ट्वा तौ च राजानौ जगामोत्तरपर्वतम् ।।1.74.1।।
आशीर्भि: पूरयित्वा च कुमारांश्च सराघवान्।
பின்னர், அன்றைய இரவு
கழிந்த பிறகு, அந்த மகாமுனிவர் விஸ்வாமித்திரர், ராமலக்ஷ்மணர்களுக்கு நிறைய
ஆசீர்வாதங்களை அளித்து விட்டு, அந்த இரண்டு அரசர்களிடத்திலும் விடை
பெற்றுக்கொண்டு, இமயமலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
विश्वामित्रे गते राजा वैदेहं मिथिलाधिपम् ।
आपृष्ट्वाऽथ जगामाशु राजा दशरथ: पुरीम्।।1.74.2।।
விஸ்வாமித்திரர்
அங்கிருந்து புறப்பட்டதும், தசரத மன்னரும், மிதிலை மன்னரான ஜனகரிடம் விடை
பெற்றுக்கொண்டு, அயோத்தியை நோக்கி விரைந்தார்.
गच्छन्तं तं तु
राजानमन्वगच्छन्नराधिप:।।1.74.3।।
अथ राजा विदेहानां ददौ कन्याधनं बहु।
தனது புதல்விகளுக்கு,
ஏராளமான பரிசுகளைக் கன்யாதனமாகக் கொடுத்த மிதிலை மன்னர் சிறிது தூரம் வரை தசரதரைப்
பின் தொடர்ந்தார்.
गवां शतसहस्राणि बहूनि
मिथिलेश्वर:।
कम्बलानां च मुख्यानां क्षौमकोट्यंबराणि च।।1.74.4।।
हस्त्यश्वरथपादातं दिव्यरूपं स्वलङ्कृतम् ।
ददौ कन्यापिता तासां दासीदासमनुत्तमम् ।।1.74.5।।
மிதிலை மன்னர் தனது
புதல்விகளுக்கு, ஒரு லட்சம் பசுக்களையும், மிகச்சிறந்த கம்பளங்களையும், கோடிக்கணக்கான
பட்டாடைகளையும், நால் வகைப் படைகளையும், நன்கு அலங்கரிக்கப்பட்ட சிறந்த ஆண், பெண்
சேவகர்களையும் பரிசாக அளித்தார்.
हिरण्यस्य सुवर्णस्य
मुक्तानां विद्रुमस्य च।।1.74.6।।
ददौ परमसंहृष्ट: कन्याधनमनुत्तमम्।
மிகுந்த
மகிழ்ச்சியுடன், ஒளி வீசிக்கொண்டிருக்கும் தங்கம், முத்துக்கள், பவழம் ஆகியவற்றால்
ஆன இணையற்ற ஆபரணங்களத் தன் புதல்வியருக்குக் கன்யாதனமாகக் கொடுத்தார்.
दत्त्वा बहु धनं राजा
समनुज्ञाप्य पार्थिवम्।।1.74.7।।
प्रविवेश स्वनिलयं मिथिलां मिथिलेश्वर:।
ஏராளமான செல்வத்தைத்
தன் புதல்விகளுக்குக் கொடுத்து, தசரதமன்னரிடம் விடை பெற்றுக்கொண்டு, மிதிலையில்
உள்ள தன் இல்லத்தில் பிரவேசித்தார்.
राजाऽप्ययोध्याधिपतिस्सह
पुत्रैर्महात्मभि:।
ऋषीन् सर्वान् पुरस्कृत्य जगाम सबलानुग:।।1.74.8।।
தசரத மன்னரும், தனது
புதல்வர்களுடன், ரிஷிகள் அனைவரும் முன்னே செல்லத் தன் படைகள் பின் தொடர, அயோத்தியை
நோக்கிப் பயணப்பட்டார்.
गच्छन्तं तं नरव्याघ्रं
सर्षिसङ्घं सराघवम्।।1.74.9।।
घोरा: स्म पक्षिणो वाचो व्याहरन्ति ततस्तत:।
தசரத மன்னர் ரிஷிகணங்களுடனும், தனது புதல்வர்களுடனும், அயோத்திக்குத் திரும்பிக்
கொண்டிருந்த போது பயங்கரமான பறவைகள் கடுமையான ஒலிகளை எழுப்பின.
भौमाश्चैव मृगा स्सर्वे
गच्छन्ति स्म प्रदक्षिणम्।।1.74.10।।
तान् दृष्ट्वा राजशार्दूलो वसिष्ठं पर्यपृच्छत।
தரையில் வசிக்கும்
விலங்குகள் எல்லாம் வலது புறமாகப் போய்க்கொண்டிருப்பதைக் கண்ட தசரதர் அதைப் பற்றி
வசிஷ்டரிடம் விசாரித்தார்.
असौम्या: पक्षिणो घोरा
मृगाश्चापि प्रदक्षिणा:।।1.74.11।।
किमिदं हृदयोत्कम्पि मनो मम विषीदति।
“இந்தப் பயங்கரமான
பறவைகளின் ஒலி அமங்கலமாக இருந்தாலும், வலது புறமாகச் செல்லும் விலங்குகள் நல்லதைக்
குறிக்கின்றன. ஏன் இப்படி? என் இதயம் துடிக்கிறது. என் மனம் கவலைப் படுகிறது. “
राज्ञो
दशरथस्यैतच्छ्रुत्वा वाक्यं महानृषि:।।1.74.12।।
उवाच मधुरां वाणीं श्रूयतामस्य यत्फलम्।
தசரத மன்னரின் இந்த
வார்த்தைகளைக் கேட்ட வசிஷ்ட முனிவர் மென்மையான குரலில் கூறினார்: “இவற்றின்
விளைவுகளைக் கூறுகிறேன். கேளுங்கள்.”
उपस्थितं भयं घोरं
दिव्यं पक्षिमुखाच्च्युतम्।।1.74.13।।
मृगा: प्रशमयन्त्येते सन्तापस्त्यज्यतामयम्।
இந்தப் பறவைகளின்
பயங்கரமான கூச்சல், ஏதோ, அமானுஷ்யமான, பயத்தை உண்டாக்கக் கூடிய நிகழ்வு நடக்கப்
போவதையும், இந்த விலங்குகளின் இயக்கம், மீண்டும் அமைதி திரும்பும் என்பதையும்
குறிக்கிறது. ஆகவே கவலைப் படாதீர்கள்.
तेषां संवदतां तत्र
वायु: प्रादुर्बभूव ह।।1.74.14।।
कम्पयन् पृथिवीं सर्वां पातयंश्च द्रुमांच्छुभान्।
அவர்கள் அவ்வாறு
பேசிக்கொண்டிருக்கும் போதே, பூகம்பத்தை ஏற்படுத்தி, அழகான மரங்களைக் கீழே
சாய்த்துக் கொண்டு, புயல் வீச ஆரம்பித்தது.
तमसा संवृतस्सूर्य
स्सर्वा न प्रबभुर्दिश।।1.74.15।।
भस्मना चावृतं सर्वं संमूढमिव तद्बलम्।
சூரியன் இருளால்
சூழப்பட்டது. எந்தத் திசையிலும் ஒளியிருக்கவில்லை. அவர்களுடைய சேனை முழுவதும்,
சாம்பலால் மூடப்பட்டது போல் புழுதி படிந்து விட்டது.
वसिष्ठश्चर्षयश्चान्ये
राजा च ससुतस्तदा ।।1.74.16।।
संसज्ञा इव तत्रासन् सर्वमन्यद्विचेतनम्।
அந்தச் சமயத்தில்,
வசிஷ்டர், மற்ற ரிஷிகள், தசரத மன்னர் மற்றும், அவருடைய புதல்வர்கள் தவிர, மற்ற
அனைவரும் நினைவிழந்து விட்டனர்.
ददर्श भीमसङ्काशं जटामण्डलधारिणम्।
भार्गवं जामदग्न्यं तं राजराजविमर्दिनम्।।1.74.18।।
कैलासमिव दुर्धर्षं कालाग्निमिव दुस्सहम्।
ज्वलंतमिव तेजोभिर्दुर्निरीक्ष्यं पृथग्जनै:।।1.74.19।।
स्कन्धे चासज्य परशुं धनुर्विद्युद्गणोपमम् ।
प्रगृह्य शरमुख्यं च त्रिपुरघ्नं यथा शिवम्।।1.74.20।।
அந்தப் பயங்கரமான
இருளில், தசரதருடைய சேனையானது சாம்பலால் மூடியது போல் இருக்க, அரசர்களை
அழித்தவரும், ப்ருகு வம்சத்தினரான ஜமதக்கினி முனிவரின் புதல்வரும், ஜடா முடி
தரித்தவரும், கைலாச மலையைப் போன்று நெருங்க முடியாதவரும், பிரளயகாலத்து அக்கினி
போன்று பொறுக்க முடியாத உஷ்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தவரும் ,தோளில்
கோடாரியையையும், கைகளில் வில்லையும் அம்பையும் ஏந்திக்கொண்டு, மின்னலைப்
போலவும், திரிபுரத்தை எரித்த சிவனைப்
போன்றும் காணப்பட்ட பரசுராமரை, அவர்கள் பார்த்தனர்.
तं दृष्ट्वा भीमसङ्काशं
ज्वलन्तमिव पावकम्।
वसिष्ठप्रमुखा विप्रा जपहोमपरायणा:।।1.74.21।।
सङ्गता मुनयस्सर्वे सञ्जजल्पुरथो मिथ:।
பரசுராமருடைய கொழுந்து
விட்டெரியும் தீயைப் போன்ற பயங்கரமான தோற்றத்தைக் கண்டு, எப்பொழுதும், மந்திரங்களை
ஜபிக்கும் வசிஷ்டர் முதலான ரிஷிகள் தங்களுக்குள் இவ்வாறு பேசிக்கொண்டார்கள்.
कच्चित्पितृवधामर्षी
क्षत्रं नोत्सादयिष्यति।।1.74.22।।
पूर्वं क्षत्रवधं कृत्वा गतमन्युर्गतज्वर:।
क्षत्रस्योत्सादनं भूयो न खल्वस्य चिकीर्षितम्।।1.74.23।।
‘இந்தப் பரசுராமர் தன்
தகப்பனாரின் கொலைக்காகப் பழிவாங்கப் புறப்பட்டிருக்கிறாரா? முன்பே க்ஷத்திரியர்களை
வதம் செய்து தன் கோபமும், துக்கமும் தணிந்திருந்த இவர் மீண்டும் க்ஷத்திரியர்களை
அழிப்பதற்காகப் புறப்பட்டிருக்கிறாரா?’
एवमुक्त्वाऽर्घ्यमादाय
भार्गवं भीमदर्शनम्।
ऋषयो राम रामेति वचो मधुरमब्रुवन्।।1.74.24।।
ரிஷிகள் அனைவரும்,
தங்களுக்குள் இவ்வாறு பேசிக்கொண்ட பின், பயங்கரமாகக் காணப்பட்ட பரசுராமருக்கு,
மரியாதையுடன் அர்க்கியம் அளித்து, ‘ராம, ராம’ என்று இனிமையாக அவரை அழைத்தார்கள்.
प्रतिगृह्य तु तां
पूजामृषिदत्तां प्रतापवान्।
रामं दाशरथिं रामो जामदग्न्योऽभ्यभाषत।।1.74.25।।
ஜமதக்கினியின்
புதல்வரான அந்தப் பரசுராமர், ரிஷிகள் அளித்த அர்க்கியத்தை ஏற்றுக்கொண்டு, தசரதனின்
புதல்வனாகிய ராமனிடம் இவ்வாறு கூறினார்:
इत्यार्षे
श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे चतुस्सप्ततितमस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான
ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் எழுபத்து
நாலாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment